Published:Updated:

தொழிலாளர்கள்தான் பயனடைய வேண்டும் சங்கங்கள் அல்ல: பிரதமர் மோடி

தொழிலாளர்கள்தான் பயனடைய வேண்டும் சங்கங்கள் அல்ல: பிரதமர் மோடி
தொழிலாளர்கள்தான் பயனடைய வேண்டும் சங்கங்கள் அல்ல: பிரதமர் மோடி

தொழிலாளர்கள்தான் பயனடைய வேண்டும் சங்கங்கள் அல்ல: பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொழிலாளர்கள்தான் பயனடைய வேண்டும் சங்கங்கள் அல்ல: பிரதமர் மோடி

புதுடெல்லி: நமது கொள்கைகள் மூலம் தொழிலாளர்கள்தான் பயனடைய வேண்டும் என்றும் சங்கங்கள் அல்ல என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 46 ஆவது தேசிய தொழிலாளர் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் , " தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நாடு மகிழ்ச்சி பெறமுடியாது. தொழிலாளார்கள் தங்களின் கனவுகளை அடையாவிட்டால்  அவர்களின் மற்றவர்களின் கனவுகளை நிறைவேற்ற முடியாது. உடையைக் கொண்டு தொழிலாளர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. நமக்கு முன் உள்ள சவால்களை  சமாளிக்க சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். சட்டங்களை எளிதாக்குவதன் மூலம், ஏழைகள் தங்களுக்கான உரிமைகளைப் புரிந்து கொள்வர்.

தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத்தான் அரசு பாடுபடுகிறது. தொழிலாளர் சீர்திருத்தம் தொடர்பாக, தொழிலாளர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தொழிலாளர் அமைப்புகளுடன் கருத்து ஒற்றுமையுடன் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். தொழிலாளர்களின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டவும், அங்கீகாரம் செய்யும் சட்டங்களை எளிதாக்குவதும் அவசியமானது.

தொழில் நிறுவனங்களின் நன்மைக்காக நாம் பணிபுரிகிறோம்.தொழில் நிறுவனங்கள் அதிகமான லாபம் அடைகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். இதே போல் வேலையானது தொழிலாளர்கள் பயனடைவதாக இருக்க வேண்டும். தொழிலாளர் சங்கங்கள் பயனடைவதாக இருக்க கூடாது.  பயிற்சி பெறும் தொழிலாளர்களை பொறுத்தவரையில்,சீனா இரண்டு கோடி பேரை கொண்டு உள்ளது. ஜப்பானில் ஒரு கோடி பேர் உள்ளனர். ஆனால் இந்தியாவில் வெறும் 30 லட்சம்  பேரே உள்ளனர். இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

சி.எஸ்.ஆர். பயிற்சி பெறும் தொழிலாளர்களை அதிக அளவில் பணிக்கு அமர்த்தி உரிய தொழில் பயிற்சி அளிக்கவேண்டும். அதிகமான மக்களுக்கு வேலை  தேவைப்படுகிறது. தொழில் நிறுவனங்களும் அதிகப்படியான பயிற்சி பெறும் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கவேண்டும், இதனால் தொழில் நிறுவனங்கள் தங்களின் லாபத்தின் அளவு குறையும் என்று மனதில் கொள்ளாதீர்கள். இது தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு ஆகும். இந்தியாவில் எனக்கு  முன்னதாக பல பிரதமர்கள் இருந்து உள்ளனர். ஆனால் தொழிலாளார்களை புரிந்து கொண்டவர் நான் ஒருவரே.

பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தினால் நாட்டில் ஏழை மக்களின் நிலை எனக்கு தெரியும். இதனை தெரிந்து கொள்ள நான் புகைப்படக்காரருடன் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தொழிலாளர்கள் எப்படி வசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க நான் புகைப்படக்காரருடன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் அவர்களுடன் நான் வசித்து உள்ளேன். அவர்களைப் பற்றி எனக்கு தெரியும். நாங்கள் நாட்டின் தொழிலாளர்களின் நலத்தின் மீது கவனம் செலுத்துகிறோம். அவர்களுடைய மெடிக்கல் தகவல்கள் அனைத்தும் இப்போது ஆன்லைனில் கிடைக்கும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு