Published:Updated:

முதலீடுகளை முடக்கினால் வேலைவாய்ப்புகள் இல்லை: அருண் ஜெட்லி!

முதலீடுகளை முடக்கினால் வேலைவாய்ப்புகள் இல்லை: அருண் ஜெட்லி!
முதலீடுகளை முடக்கினால் வேலைவாய்ப்புகள் இல்லை: அருண் ஜெட்லி!

முதலீடுகளை முடக்கினால் வேலைவாய்ப்புகள் இல்லை: அருண் ஜெட்லி!

முதலீடுகளை முடக்கினால் வேலைவாய்ப்புகள் இல்லை: அருண் ஜெட்லி!

 புதுடெல்லி: நாட்டிற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை முடக்கினால், நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த 46 ஆவது  தேசிய தொழிலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

" உலகில் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா மட்டுமே பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், குவிந்து கொண்டிருக்கும் முதலீடுகளை நிறுத்தினால் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியாது. உலக பொருளாதாரமே சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசு புதிதாக முன்மொழிந்துள்ள தொழிலாளர் நல சீர்திருத்தங்கள் அனைத்தும் நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை எளிதாகச் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அப்போதுதான் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எந்த ஒரு தொழிலாளர் சங்கத் தலைவரும் பொருளாதாரத்தைப் பாதிக்கும், வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் முடிவுகளை எடுக்கக்கூடாது. வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது தொழிலாளர்களுக்கு நன்மையைத்தான் வழங்கும். மத்திய அரசு கொண்டு வரும் புதிய வரிவிதிப்பு முறைகள் வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்கக்கூடியவை. திடமான தொழிற்சாலைகள் அதிக சம்பளத்தை வழங்க முடியும். அரசாங்கமும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்க முடியும். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் எடுத்துச் செல்வது அரசின் பொறுப்பு" என்றார்.

 

அடுத்த கட்டுரைக்கு