Published:Updated:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் டெலிபோன் பில் மாதத்திற்கு ரூ. 5 லட்சம்!

 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் டெலிபோன் பில் மாதத்திற்கு ரூ. 5 லட்சம்!
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் டெலிபோன் பில் மாதத்திற்கு ரூ. 5 லட்சம்!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் டெலிபோன் பில் மாதத்திற்கு ரூ. 5 லட்சம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் டெலிபோன் பில் மாதத்திற்கு ரூ. 5 லட்சம்!

புதுடெல்லி/மும்பை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு மாதத்திற்கு தொலைபேசி கட்டணமாக 5 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மும்பையை சேர்ந்த மன்சூர் தர்வேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மாளிகைக்கான பராமரிப்பு செலவுகள் மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார்.

இது தொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்ட பதிலில், ஜனாபதி மாளிகைக்கான செலவினங்கள் கடந்த மூன்று நிதியாண்டுகளில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. 2012 - 13 ல்  30.96 கோடி ரூபாயாகவும், 2014 - 15 ல் 41.96 கோடி ரூபாயாகவும் செலவினங்கள் அதிகரித்துள்ளது.  ஜனாதிபதி மாளிகையில் பணிபுரியும் பணியாளர்களுக்கான செலவினங்கள், பராமரிப்பு செலவினங்கள் மற்றும் ஜனாதிபதிக்கான செலவினங்கள் இதில் அடங்கும்.

ஜனாதிபதி செயலகத்தில் மொத்த, 754 பணியாளர்கள் உள்ளனர். இதில் 9 பேர் தனிச் செயலர்கள், 27 பேர் டிரைவர்கள், பல்வேறு தொழில்களை செய்யும் 64 பணியாளர்கள், 8 தொலைபேசி ஆப்ரேட்டர்கள் பணியில் உள்ளனர்.

கடந்த மே மாதம் இவர்களுக்கான சம்பளமாக 1.52 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதே மாதத்தில் 5.06 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 5.06 லட்சம் மற்றும் 4.25 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனக்கு கிடைத்த தகவலை வெளியிட்டுள்ள தர்வேஷ், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி பார்த்தால் ஆண்டொன்றுக்கு ஜனாதிபதி மாளிகையின் செலவும் சுமார் 100 கோடி ரூபாயை தொடும் என தெரிவித்துள்ளார். 

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு