Published:Updated:

அண்ணாவிடம் நேரில் சொல்ல துடிக்கிறேன்: கருணாநிதி உருக்கம்!

அண்ணாவிடம் நேரில் சொல்ல துடிக்கிறேன்: கருணாநிதி உருக்கம்!
அண்ணாவிடம் நேரில் சொல்ல துடிக்கிறேன்: கருணாநிதி உருக்கம்!

அண்ணாவிடம் நேரில் சொல்ல துடிக்கிறேன்: கருணாநிதி உருக்கம்!

அண்ணாவிடம் நேரில் சொல்ல துடிக்கிறேன்: கருணாநிதி உருக்கம்!

சென்னை: "கடலூர் மாநாட்டின் கண்கொள்ளா காட்சிகள் என் மனதை எப்படி குளிர வைத்தது என்பதை என்னை ஆளாக்கிய அறிஞர் அண்ணாவிடம் நேரிலே சொல்ல துடிக்கின்ற நிலையில் நான் இருக்கிறேன்" என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் தளத்தில் அவர் , "கடலூருக்கு ஊர் பெயர் காரணப் பெயராக அமைந்தது" என்பதைப் போல 18.7.2015 தேதியில் நடைபெற்ற கழகப் பொருளாளர், தளபதி, மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட பெரும் கூட்டம் அமைந்தது என்பதை எண்ணியெண்ணி,
"மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்"
என்ற குறளையும்,

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"

என்ற குறளையும் நினைவூட்டும் வகையில் அமைந்திருந்ததை தொலைக்காட்சி வாயிலாக கண்டு களித்தேன்.

தளபதி மு.க.ஸ்டாலின், அந்தப் பெருங் கடல் போன்ற கூட்டத்தில் அதாவது கடலூர் கூட்டத்தில் எடுத்துரைத்த கருத்துகள் எப்படி மக்கள் மனதைக் கவர்ந்ததோ, அப்படி மக்கள் மனதைக் கவரத்தக்க பல சொற்பொழிவுகளை நம்முடைய உடன்பிறப்புகள் தொடர்ந்து பேசுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல, கடலூர் பகுதி கழக உடன்பிறப்புகள், செயல்வீரர்கள் நேற்று நடத்திக் காட்டிய "பிரமாண்டம்" அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது! என்னுடைய இந்தப் பாராட்டு அந்தப் பெருங் கூட்டத்தை நடத்திய கழகக் கண்மணிகளுக்கு மேலும் உற்சாகம் ஊட்ட - அவர்கள் உழைப்பினைத் தொடர்ந்திட பயன்பட வேண்டுமென்று கருதுகிறேனே அல்லாமல்; பாராட்டு மழையில் அவர்களை யெல்லாம் குளிப்பாட்டி, குளிரச் செய்ய வேண்டுமென்பதற்காக அல்ல!

அண்ணாவிடம் நேரில் சொல்ல துடிக்கிறேன்: கருணாநிதி உருக்கம்!

கடலூர், நான் மறக்க முடியாத, என் நெஞ்சில் பதிந்து விட்ட பட்டணங்களில் ஒன்று. இன்றைக்கும் தம்பி ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, சமுதாயக் காவலர், ராமசாமி படையாச்சியார், என் அரும் நண்பர்; அவர் உலவிய இடம். அவர் வெற்றிக்காக நான் சென்று உழைத்திட்ட இடமும் கூட. இன்றைக்கும் என்னால் அவரையும் - முதியவர் ஏ.கோவிந்தசாமி அவர்களையும் - கம்பீர உருவம் படைத்த என்னரும் நண்பர், இளவல், மறைந்த விட்ட இளம்வழுதி அவர்களையும் - அந்த மாவட்டத்தில் கழகம் வளர்த்த விழுப்புரம் சண்முகம் உடையார், விருதாசலம் செல்வராஜ், முட்டம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் பொன்.சொக்கலிங்கம் இன்னும் பல அருமை உடன்பிறப்புகளையும் என்னால் எப்படித் தான் மறக்க முடியும்? அவர்கள் எல்லாம் இருந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன்!

இப்போது அவர்கள் எல்லாம் இல்லாத நேரத்தில், அவர்களின் தொண்டினைத் தொடர, ஆயிரமாயிரம் இளைஞர்கள் குவிந்திருந்த கடலூர் மாநாட்டின் கண்கொள்ளா காட்சிகள் எனக்கு வழங்கியதை - எப்படிப்பட்ட எழுச்சி தமிழகத்திலே இன்றைக்கு இளைஞர்கள், தாய்மார்கள், பெரியோர்கள், வாலிபர்கள், விவசாயிகள், வியாபாரிகள் இப்படி பல தரப்பட்ட மக்களும் ஒன்று திரளுகின்ற காட்சி - என் மனதை எப்படி குளிர வைத்தது என்பதை - என்னை ஆளாக்கிய அறிஞர் அண்ணா அவர்களிடம் - நேரிலே சொல்லி நானும் மகிழ்ந்து அவரையும் மகிழச் செய்ய வேண்டுமென்று துடிக்கின்ற நிலையில் நான் இருக்கிறேன்.

இன்றோடு இது முடியாமல் தொடர்ந்து இந்த இன இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எல்லா வகையிலும் உழைத்திட, இந்த இன இயக்கத்தை மேலும் வளர்த்திட, தொடர்ந்து தொகை தொகையாக இளைஞர்கள் குவிந்திட வேண்டும். அதே நேரத்தில், தொகைகளையும் தேர்தல் நிதியாகக் குவித்திட வேண்டும்.

என் எண்ணம் ஈடேற, வர இருக்கின்ற பொதுத் தேர்தலில், நான் எதை விரும்புகிறேன் என்பதையும் - எந்த இளைஞர் சமுதாயத்தை ஏற்றமிகு திராவிடர் சமுதாயத்தின் ஒளி விளக்குகளாக ஏற்றி வைத்திட விரும்புகிறேன் என்பதையும் என்னை உணர்ந்தவர்களும் - ஏறத்தாழ 90 ஆண்டு காலத்திற்கு மேலாக என்னோடு உழைத்தவர்களும் - தங்கள் பணி முடிந்தது என்று கருதாமல் - எல்லா வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேவைகளை உணர்ந்து - ஆற்ற வேண்டிய சேவைகளைப் பகிர்ந்து கொண்டு - ஒன்றுபட்ட நிலையில் தியாக உணர்வோடு - திராவிட இனத்தை உயர்த்திப் பிடிக்க - உடன்பிறப்புக்களே! உங்கள் உள்ளங்களின் உணர்ச்சியையும் - எழுச்சியையும் - ஊட்டுகின்ற வகையில் - வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வளர்க திராவிட முன்னேற்றக் கழகம்! வளர்க இளைஞர் கூட்டம்! தளபதியின் தளரா உழைப்பு தொடரட்டும்! தொடரட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு