Published:Updated:

நாடாளுமன்றக் கூட்டம்: அதிமுக எம்.பி.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை!

 நாடாளுமன்றக் கூட்டம்: அதிமுக எம்.பி.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை!
நாடாளுமன்றக் கூட்டம்: அதிமுக எம்.பி.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை!

நாடாளுமன்றக் கூட்டம்: அதிமுக எம்.பி.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் ஜெயலலிதாவுடன் அதிமுக எம்பி க்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையாகி, முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நடந்த அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 நாடாளுமன்றக் கூட்டம்: அதிமுக எம்.பி.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை!

இது தொடர்பாக அதிமுக இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

" நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கவுள்ளது. இதையொட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் இன்று அதிமுக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தின்போது, அதிமுக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் " என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு