Published:Updated:

தலைமைச் செயலகம் எப்போது அதிமுக அலுவலகமாக மாறியது? ராமதாஸ் காட்டம்

சென்னை: தலைமைச் செயலகம் எப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகமாக மாறியது? என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாகவும், மானிய கோரிக்கைகள் பற்றியும் விவாதித்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
 
தலைமைச் செயலகம் எப்போது அதிமுக அலுவலகமாக மாறியது? ராமதாஸ் காட்டம்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், தலைமைச் செயலகம் எப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகமாக மாறியது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அரசு அலுவலகமான தலைமைச் செயலகத்தை அதிமுக அலுவலகமாக மாற்றிய ஜெயலலிதாவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு