Published:Updated:

திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு

திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு
திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு

திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விருதுநகர்: மாஜி திமுக அமைச்சரின் ஆட்கள் மிரட்டுவதாக கூறி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டியை சேர்ந்தவர் கோஷ் (45). இவர் கொடிக்குளம் கிராமத்தின் திமுக கிளைச்செயலாளராக பதவி வகித்தார். கடந்த சட்டசபை தேர்தலின் போது விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் திமுக அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ஸ்ரீவில்லிப்புத்துார் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித்தருவதாக ரூ.25 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேறு நபருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்து விட்டார். தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு பணத்தை கொடுக்க முடியாது என்று கூறி ஆட்கள் வைத்து மிரட்டினார் என்று கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கோஷ், கூமாப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு

ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததையடுத்துமதுரை ஐகோர்ட் கிளையில் மாஜி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது இதே புகாரைக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோஷ் கொடுத்த புகாரில், முகாந்திரம் இல்லை என்று சொல்லி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பொது மக்களிடம் மனுக்கள் பெற்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்த கோஷ், "தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., என்னை ஆட்களை வைத்து மிரட்டுகிறார்" என்று கூறி தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கோஷ்சிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி பிறகு அவரை கைது செய்து, சூலக்கரை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று, விசாரணை செய்து வருகின்றனர்.

திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு

கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மீதான வழக்கு தொடர்பான ஆவணங்களை ஸ்ரீவில்லிப்புத்துாரில் நேதாஜி ரோட்டில் உள்ள திருப்பதி என்பவரிடம் ஜெராக்ஸ் எடுக்க கொடுத்தேன். ஆனால் அதை அவர் வேறு யாரிடமோ  கொடுத்துவிட்டார். அதன் மூலம் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆட்கள் என்னை செல்போனில் மிரட்டி வருகின்றனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுகவைச் சேர்ந்த ஒரு நிர்வாகி, தன் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு இன்று தற்கொலை புரியும் அளவுக்கு போனநிலையிலும், திமுக தலைமை கடந்த பல வருடங்களாக இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை.

தன் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் மீதான குற்றச்சாட்டை நேரில் அழைத்து விசாரணை நடத்தாமல் வேடிக்கை பார்ப்பது அக்கட்சிக்கு அழகா என்கிறார்கள்? சக தொண்டர்கள்.

- எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு