Published:Updated:

ஜெ. மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு 27ல் விசாரணை!

ஜெ. மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு 27ல் விசாரணை!
ஜெ. மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு 27ல் விசாரணை!

ஜெ. மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு 27ல் விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெ. மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு 27ல் விசாரணை!

புதுடெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது 27ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி குமாரசாமியின் உத்தரவில் கணக்குப்பிழை இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மனுவில் 10 குறைபாடுகள் இருந்ததை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை அடுத்து, கர்நாடக அரசு திருத்தப்பட்ட புதிய மேல்முறையீட்டு மனுவை கடந்த 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதேபோல், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் இருந்த 9 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிக்காட்டியது. இதையடுத்து, திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 16ஆம் தேதி அன்பழகன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை, வரும் 27ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு