Published:Updated:

லலித் மோடியால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!

லலித் மோடியால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!
லலித் மோடியால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!

புதுடெல்லி: லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.
 

லலித் மோடியால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!

லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலகக் கோரி மாநிலங்களவையை நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கியது.

இதே நிலைதான் இன்றும் நீடித்தது. மக்களவை இன்று காலை கூடியதும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள், மத்திய அமைச்சர் சுஷ்மா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவை நடவடிக்கையை நண்பகல் 12 மணி ஒத்திவைத்தார்.

இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. இதனால் அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மீண்டும் அவை நண்பகல் 12.34 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, 12 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.