Published:Updated:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் ஊரடங்கு உத்தரவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் ஊரடங்கு உத்தரவு!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் ஊரடங்கு உத்தரவு!

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ். கொடி விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க ராஜோரி பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் ஊரடங்கு உத்தரவு!



ஜம்மு காஷ்மீரில் பிரிவினை கோரும் கட்சியினர் தாங்கள் நடத்தும் பேரணிகளின் போது பாகிஸ்தான் கொடிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களின் கொடிகளை ஏந்திச் செல்லும் செயல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் அங்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்க கொடி எரிக்கப்பட்டது. இதனையடுத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.இதானால் பதற்றம் நிலவியது. அதனைத் தொடர்ந்து  பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

போராட்டம் நடத்தியவர்கள் குர்ஆன் வசனங்கள் அடங்கிய கொடியை ஏந்தியிருந்தனர் என்றும் அவர்கள் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.இதனையடுத்து  இருதரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் என்று மாநில துணை முதல்வர்  நிர்மல் சிங் கோரிக்கை விடுத்து உள்ளார். “இங்கு எந்தஒரு மத சிக்கலும்  இருக்ககூடாது. இரு தரப்பினரும் அமைதியாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்,” என்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று மாவட்ட நீதிபதி தீப்தி உப்பால் தெரிவித்து உள்ளார். இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதம் கொடி எரிக்கப்பட்ட விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கைதுசெய்யப்படுவார்கள் என்பதை மறுத்துவிட்டார். மேலும், தீப்தி பேசுகையில், தீவிரவாத இயக்கம் மற்றும் தேசத்திற்கு எதிரான இயக்கங்களின் கொடியை எரிப்பது என்பது தேசப் பற்று பணியாகும், என்று கூறினார். “நாங்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியைத் தான் எரித்தோம், ஆனால் அதில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று எங்களுக்கு தெரியாது,” என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ராமாகாந்த் துபேய் கூறியிருக்கிறார்.