Published:Updated:

``50 அதிமுக எம்எல்ஏ-க்கள், 30 மா.செ-க்கள் எங்களுடன் தொடர்பில்..!" - இபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

ஆர்.எஸ்.பாரதி

``அ.தி.மு.க-வின் 50 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்" என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.

``50 அதிமுக எம்எல்ஏ-க்கள், 30 மா.செ-க்கள் எங்களுடன் தொடர்பில்..!" - இபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

``அ.தி.மு.க-வின் 50 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்" என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``தி.மு.க-வின் 10 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-வுடன் பேசி வருகின்றனர். தி.மு.க ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள்தான் இப்போது அ.தி.மு.க-வை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தி.மு.க-வின் 50 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் மற்றும் 30 மாவட்டச் செயலாளர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை வெளியிட்டால், நானும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை வெளியிடத் தயாராக இருக்கிறோம். தி.மு.க-தான் உண்மையான திராவிட இயக்கம். இதுதான் திராவிட இயக்கத்தின் தாய் கழகம். அ.தி.மு.க-விலிருந்த பலரும், தி.மு.க-வில் இணைந்த பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-விலுள்ள அனைவருமே இங்க வந்து தி.மு.க-வில் இணையவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எந்த பதவியிலும் இல்லாத சசிகலாவை சட்டமன்றத்தில் உட்கார வைக்கும் கட்சிதான் அ.தி.மு.க'' என்றார்.