Published:Updated:

`சிப்காட் அமைக்க 5,000 விவசாயக் குடும்பங்களை நசுக்குவதா?’ - தனிநபராக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்

கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்

சூளகிரியில், சிப்காட் வளாகம் அமைக்க விளைநிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

`சிப்காட் அமைக்க 5,000 விவசாயக் குடும்பங்களை நசுக்குவதா?’ - தனிநபராக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்

சூளகிரியில், சிப்காட் வளாகம் அமைக்க விளைநிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

Published:Updated:
கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட உத்தனப்பள்ளி கிராமத்தில், 5-வது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் சுமார் 3,034 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென்னை மற்றும் மாந்தோப்பு, 30-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள், 50-க்கும் அதிகமான பசுமைக்குடில்கள், 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் அதற்கான நீர்வழித்தடங்கள் என மூன்று ஊராட்சிகளுமே வேளாண் நிலப்பரப்பைக் கொண்டவைதான்.

தென்னை விவசாயம்
தென்னை விவசாயம்

மலர்ச் சாகுபடி, புதினா, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்றவையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. நல்ல விளைச்சல் தரக்கூடிய மூன்று போக சாகுபடி பூமி என்பதால், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அதன் உரிமையாளர்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன. இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமியும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை 7 மணியிலிருந்து தனிநபராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அவரின் இந்த உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கே.பி.முனுசாமிக்கு உறுதுணையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து அ.தி.மு.க நிர்வாகிகளும், விவசாயிகளும் அங்கு திரண்டு வந்து கூடியிருக்கிறார்கள்.

கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்
கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்

இது குறித்து, அங்கிருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘தொழிற்சாலைக்காக விளைநிலங்கள் பறிக்கப்படுவதால், ஐந்தாயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மாநில அரசின் இப்படியான அராஜக நடவடிக்கைக்குக் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். விவசாயிகளை நசுக்கும் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும்விதமாகவே கே.பி.முனுசாமி தனி ஒரு மனிதராகப் போராட்டம் செய்துவருகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism