Published:Updated:

அப்துல் கலாம் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல் கலாம் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
அப்துல் கலாம் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

அப்துல் கலாம் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

அப்துல் கலாம் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். அவர் இறந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் சோகத்தில் உறைந்துள்ளது.

குடியரசுத் தலைவர்...

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ''அப்துல்கலாம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தவர். அவர் மரணத்துக்கு பின்னரும் அப்படியே தொடருவார்" என்று தெரிவித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவர்...

துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, ''அப்துல்கலாம் பன்முகதன்மை கொண்ட மனிதர். அவர் ஒரு தொழில்நுட்ப மனிதர்" என்று கூறி உள்ளார்.

பிரதமர்...

பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், ''அப்துல்கலாமின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. இந்தியாவை அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு சென்ற இந்த தேசத்தின் வழிகாட்டியை நான் இழந்துவிட்டேன். அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமின்றி விண்வெளித்துறைக்கும் மிகப்பெரிய பங்காற்றிய விஞ்ஞானி. நாடு முழுமைக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தவர். அவரது இறுதி நாட்களிலும் அவர் தொடர்ந்து அந்த தொடர்பிலேயே இருந்தார்" என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர்...

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ''கலாம் மிகப்பெரும் அறிவியல் அறிவு பெற்றவர். அரசியல்மேதைகளின் ஆசான், உண்மையான தேசபக்தர், கோடிக்கணக்கான இளைஞர்களை மட்டுமின்றி முதியவர்களையும் தனது பணிகள், செயல்களால் கவர்ந்தவர். இந்த தேசத்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களையும் கவர்ந்தவர்" என்று கூறி உள்ளார்.

உள்துறை அமைச்சர்...

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ''இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவர் மாசற்ற பண்பு, சோர்வில்லாத ஆன்மா, நுட்பமான பொதுஅறிவு, உறுதியான முடிவு ஆகிய பண்புகளை கொண்டவர். அவரது மறைவு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச்சென்ற மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அவரது மறைவால் நான் ஆழ்ந்த துயரம் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர்...

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில், ''அப்துல்கலாம் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவர் இந்த தேசத்தின் இதயங்களையும், மனங்களையும் தனது உள்ளன்பாலும், அறிவுக்கூர்மையாலும் வெற்றி கண்டவர்" என்று தெரிவித்து உள்ளார்.

டெல்லி முதல்வர்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ''அப்துல்கலாம் மறைந்துவிட்டார் என்ற தகவலை கேட்டது நமக்கு வருத்தமளிக்கிறது. இந்த தேசம் ஒரு உண்மையான பாரத ரத்னாவை இழந்துவிட்டது" என்று கூறி உள்ளார்.

இதேபோல், அப்துல்கலாமின் மறைவுக்கு அனைத்து மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு