Published:Updated:

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!
அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

புதுடெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல், கவுகாத்தியில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

இந்நிலையில், அப்துல்கலாமின் உயிர் பிரிந்த ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் இருந்து அவரது உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமித் மகாஜன் தெரிவித்தார்.

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

அதன்படி ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு கலாமின் உடல் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்டு,  அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட கலாமின் உடல், டெல்லி பாலம் விமான நிலையத்தில் முப்படை தளபதிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் பெறப்பட்டது.

பின்னர், அப்துல்கலாம்  உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் நஜிம் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

சோனியா, மன்மோகன், அத்வானி அஞ்சலி

டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹா,  அதிமுக அமைச்சர்கள் தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன், மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.ராஜா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அப்துல்கலாம் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி!

கலாம் உடல் நாளை ராமேஸ்வரம் வருகிறது

இதைத் தொடர்ந்து அப்துல்கலாம் உடல், பிற்பகல் 3 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இன்று முழுவதும் கலாம் உடலுக்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

நாளை 1 மணிக்கு அப்துல்கலாம் உடல், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வரப்பட உள்ளது. உடல் அடக்கத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணியை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு