Published:Updated:

நாடாளுமன்றத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாடாளுமன்றத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல்!
நாடாளுமன்றத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல்!

நாடாளுமன்றத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல்!

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 

நாடாளுமன்றத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,  மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், அப்துல்கலாம் மறைவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியதும், அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இரங்கல் செய்தியை படித்தார். பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து மக்களவை நடவடிக்கையை வரும் 30ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதேபோல் மாநிலங்களவையிலும் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு