Published:Updated:

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர், மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர்,  மாநில முதல்வர்கள் பங்கேற்பு!
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர், மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர், மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர்,  மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இறுதிச்சடங்கு நாளை மறுதினம் ( புதன்கிழமை) நடைபெறுகிறது என்றும், இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில், (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது உடல் கவுகாத்தியில் இருந்து ராணுவ விமானம் மூலம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக பிற்பகல் 3 மணிக்கு கலாமின் உடல் வைக்கப்பட உள்ளது. இதையடுத்து  நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கலாமின் உடல் ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது.
 

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர்,  மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

இதனிடையே, அப்துல்கலாமின் இறுதிச்சடங்கு குறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது பேரன் ஷேக் சலீம், "அப்துல் கலாம் உடல் நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர்,  மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

பகல் 12 மணியளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அப்துல் கலாமின் உடல் வைக்கப்படுகிறது. இரவு 8 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர்,  மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

அதன் பின்னர் அப்துல் கலாமின் உடல் அவரது அண்ணன் முகமது முத்துமீரா மரைக்காயர் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உறவினர்கள் மற்றும் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் மரியாதைக்கு வைக்கப்படுகிறது. இங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியில்லை.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர்,  மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

30ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அப்துல் கலாமின் உடல் அங்கிருந்து அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பேய்கரும்பு என்னும் கிராமத்தில் சுமார் ஒன்னே முக்கால் ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு நிலத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு: பிரதமர்,  மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர் " என்று தெரிவித்தார்.
 

-இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு