Published:Updated:

டாஸ்மாக், பாஸ்மார்க்: தமிழக அரசுக்கு மார்க் போடுகிறார் தமிழிசை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாஸ்மாக், பாஸ்மார்க்: தமிழக அரசுக்கு மார்க் போடுகிறார் தமிழிசை!
டாஸ்மாக், பாஸ்மார்க்: தமிழக அரசுக்கு மார்க் போடுகிறார் தமிழிசை!

டாஸ்மாக், பாஸ்மார்க்: தமிழக அரசுக்கு மார்க் போடுகிறார் தமிழிசை!

அரியலூர்: தமிழக அரசு எலைட் மதுபான கடைகள் திறக்க இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம் என்று கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,  டாஸ்மாக் விஷயத்தில் மட்டும்தான் தமிழக அரசு பாஸ்மார்க் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்

அரியலூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் மாற்று சக்தியாக வளர்ந்து வருகிறது. பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதுரை வருகிறார். அவர்  உறுப்பினர் சேர்க்கை குறித்த கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.  அன்றைய தினம் தேசிய கைத்தறி நாள் அறிவிப்பை அவர் வெளியிட்டு, பேசுகிறார். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் நெசவாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

டாஸ்மாக், பாஸ்மார்க்: தமிழக அரசுக்கு மார்க் போடுகிறார் தமிழிசை!

தமிழ்நாட்டில் இன்று மாற்று சக்தியாக பாஜக வளர்ந்து வருகிறது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் காங்கிரஸ் பலவீனமான கட்சியாக உள்ளது. ராகுல் காந்தி திருச்சி வந்ததால் எழுச்சி என்று இளங்கோவன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் சென்று விவசாயிகளை சந்திக்கட்டும், 10 ஆண்டுகளாக விவசாயிகளை பற்றி கவலைப்படாத ராகுல் காந்தி,  ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் பேசிக்கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி வருகை தமிழ்நாட்டில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.

தொடர்ந்துபேசிய அவர், “ மத்திய அரசின் நவீன நகரம் அமைக்கும் திட்டத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் நவீன நகரங்கள் அதிக அளவில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, ஆனால் அந்த நவீன நகரங்களை அமைப்பதற்காக அடிப்படை கட்டமைப்புகள் இல்லாதது வருத்தமளிப்பதாக உள்ளது.

மத்திய அரசுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை உள்ளது. மாநில அரசோ மக்களை குடிக்கவைப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால் தெழில் அதிபர்கள் யாரும் தொழில் செய்ய முன்வரவில்லை. தமிழகத்தில் 50 சதவீத மக்களுக்கே குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.  இதனால் மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காத நிலைமைதான் உள்ளது.

டாஸ்மாக், பாஸ்மார்க்: தமிழக அரசுக்கு மார்க் போடுகிறார் தமிழிசை!

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எழுச்சி எழுந்துள்ள நிலையில்,  தமிழக அரசு தமிழ்நாட்டில் எலைட் மதுபானக்கடை திறக்கப்படும் என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். தமிழக அரசு டாஸ்மாக்கில்தான் பாஸ்மார்க் வாங்கும், தமிழ்நாடு அரசு ஒரு செயல்படாத அரசாகத்தான் உள்ளது.

ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்ற பிறகாவது அரசு செயல்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. தமிழகம் அடிப்படை கட்டமைப்புகள் அற்ற மாநிலமாக இருப்பதற்கு திமுக, அதிமுக கட்சிகளே காரணம். தமிழக அரசு எலைட் மதுபான கடைகள் திறக்க இருப்பது வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவதற்கு சமம்” என்றவர், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். இந்த கூட்டணியில் பாஜக முதன்மை கட்சியாக விளங்கும்"  என்று முடித்தார்.

- எம்.திலீபன்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு