Published:Updated:

அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு: தமிழகத்தில் பொதுவிடுமுறை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு: தமிழகத்தில் பொதுவிடுமுறை!
அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு: தமிழகத்தில் பொதுவிடுமுறை!

அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு: தமிழகத்தில் பொதுவிடுமுறை!

அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு: தமிழகத்தில் பொதுவிடுமுறை!

சென்னை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு நாளை மறுதினம் (30ஆம் தேதி) நடைபெறுவதையொட்டி, தமிழக அரசு அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று  மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, அப்துல் கலாமின் உடல் நாளை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் அப்துல் கலாமின் உடல், நாளை மறுதினம் (30ஆம் தேதி) இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

இந்நிலையில், அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 30ஆம் தேதி தமிழகத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதேபோல், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அப்துல் கலாமின் இறுதிச் சடங்கையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30ஆம் தேதி அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு