Published:Updated:

பஸ் கட்டண உயர்வு: நவ.23-ல் பாமக ஆர்ப்பாட்டம்

Vikatan Correspondent
பஸ் கட்டண உயர்வு: நவ.23-ல் பாமக ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வு: நவ.23-ல் பாமக ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வு: நவ.23-ல் பாமக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, வரும் 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், "பேருந்து கட்டண உயர்வு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக உள்ளது," என்று குற்றம்சாட்டியுள்ளார்.

"பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக உள்ளது. நகரப் பேருந்துகளில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சாதாரண பேருந்துகளில்கூட குறைந்த அளவு கட்டணம் 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சில தடங்களில் பேருந்து கட்டணம் 200 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகளில் தனியார் ஆம்னி பேருந்துகளைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பால் விலையை ஒரேநேரத்தில் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை. மின்வெட்டை சரிசெய்ய முடியாத அரசு மி்ன்கட்டணத்தை உயர்த்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நிதிநெருக்கடி ஏற்படும்போது கசப்பு மருந்து கொடுப்பது இயல்பானதுதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கசப்பு மருந்தைக் கொடுத்து விஷமாக்கியிருக்கிறது அரசு.

எனவே, பேருந்து கட்டண உயர்வையும், பால் விலை உயர்வையும் திரும்பப் பெற வேண்டும்;  மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 23-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பாமக சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.