Published:Updated:

கொலைகாரர்கள் போல் அரசு நடக்க கூடாது: சசி தரூர் குற்றச்சாட்டு!

கொலைகாரர்கள் போல் அரசு நடக்க கூடாது: சசி தரூர் குற்றச்சாட்டு!
கொலைகாரர்கள் போல் அரசு நடக்க கூடாது: சசி தரூர் குற்றச்சாட்டு!

கொலைகாரர்கள் போல் அரசு நடக்க கூடாது: சசி தரூர் குற்றச்சாட்டு!

கொலைகாரர்கள் போல் அரசு நடக்க கூடாது: சசி தரூர் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: கொலைகாரர்களை போல் அரசு நடக்க கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறி உள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''143 உலக நாடுகள் ஏற்கெனவே மரண தண்டனையை ஒழித்துவிட்டன. மற்ற 25 நாடுகளில் மரண தண்டனை சட்டத்தில் இருந்தாலும், அந்த நாடுகள் மரண தண்டனை விதிப்பதில்லை. சுமார் 35 நாடுகள் மட்டுமே தற்போது மரண தண்டனை விதித்து வருகின்றன.

ஒருவர் கொலை செய்தால், பதிலுக்கு அவர் கொல்லப்பட வேண்டும் என்ற நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தது. அதே வழக்கத்தை இன்று நாமும் ஏன் பின்பற்ற வேண்டும். கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுப்பதால், நாமும் அவர்களைப் போன்றே நடந்து கொள்கிறோம். கொலைகாரர்களைப் போன்றே அரசும் நடந்துகொள்ளக் கூடாது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன்கூட "யாருடைய உயிரையும் பறிப்பதற்கு நமக்கு உரிமையில்லை' என்று கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்படுவதற்கும், கொலைகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் இடையே தொடர்பு இல்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிப்பதற்கு எந்தக் குற்றம் முதன்மையானதாக இருந்தது என உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்க முடியவில்லை. வசதி படைத்த குற்றவாளிகளை விட, ஏழைக் குற்றவாளிகள் அதிகம் தண்டிக்கப்படுவதால், குற்றவாளிகளின் பொருளாதார நிலைமை, அவருடைய தண்டனையை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது.

தற்போதைய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் தவறுகள் நடப்பதற்கும், பாரபட்சம் காட்டப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தீவிரவாதிகளுக்கு பரோல் கொடுக்காமல், வாழ்நாள் முழுவதும் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு