Published:Updated:

மதுவிலக்கை அரசு 10ம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் போராட்டம்: கொதித்த தமிழசை!

மதுவிலக்கை அரசு 10ம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் போராட்டம்: கொதித்த தமிழசை!
மதுவிலக்கை அரசு 10ம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் போராட்டம்: கொதித்த தமிழசை!

மதுவிலக்கை அரசு 10ம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் போராட்டம்: கொதித்த தமிழசை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுவிலக்கை அரசு 10ம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் போராட்டம்: கொதித்த தமிழசை!

சென்னை: மதுவிலக்கு அறிவிப்பை 10ம் தேதிக்குள் அரசு வெளியிடாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''சசி பெருமாளின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் போலீசார் கைது செய்து, தனித்தனி இடத்தில் அடைத்து இருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வருவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். மாற்று வருமானம் குறித்து தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். 10 ஆம் தேதிக்குள் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. போராட்டத்தை முன் எடுத்து செல்லும்.

மது விலக்கை முன் எடுத்து செல்லும் அதே வேளையில் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் வகையில் எங்கள் கட்சி சார்பில் போதை மீட்பு மையங்களை இலவசமாக ஏற்படுத்த உள்ளோம். அதனை தமிழகம் முழுவதும் அமைப்போம். மற்ற அமைப்புகளும் இதனை செய்ய முன்வர வேண்டும். கன்னியாகுமரியில் 4 ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளோம். மது விலக்கை வலியுறுத்தி அனைவரும் போராடி வரும் வேளையில் தனித்தனியாக போராட்டம் அறிவித்திருப்பது தேவையற்றது.

தி.மு.க. ஆட்சியில் மது ஆறாக ஓடியது. ஆனால், அந்த கட்சியே இன்றைக்கு மது விலக்கை கொண்டு வருவோம் என்று திருந்தி, தங்களை திருத்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தொண்டர்களுக்கு மது அருந்தாதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், மதுவிலக்கை வலியுறுத்தி பேசி வரும் சில கட்சிகள் கட்சி பொது கூட்டம் நடத்துகிறபோது, அந்த இடங்களில் மது விற்பனை அதிகமாக நடப்பதாக செய்திகள் வெளிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு