Published:Updated:

அம்மா... அம்மம்மா!

அம்மா... அம்மம்மா!

அம்மா... அம்மம்மா!
அம்மா... அம்மம்மா!
அம்மா... அம்மம்மா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலமைச்சர் ரூம்ல ஃபுல் ஏ.சி.! அதையும் தாண்டி என்னைத் தவிர அங்க இருந்தவங்க எல்லோரும் படபடப்பா இருந்தாங்க. ஜெயலலிதா விசாரணையை ஆரம்பிச்சாங்க. அவங்க கையில ஜூ.வி.

'என்ன சேகர், அந்தாளைப் பத்தி இப்படியரு பேட்டியைக் கொடுத்திருக்கீங்க?'ன்னு கேட்டாங்க.

அம்மா... அம்மம்மா!

'நீங்க சொல்லலை.... அதான் நா சொல்லிட்டேன்மா'ன்னு சொன்னேன். உடனே ஜெயலலிதா, ' 'யார் இவர் (விஜய காந்த்)? ஹி ஈஸ் எ டஸ்ட். நமக்குப்

போட்டியா அவரு வருவாருங்கறதே தப்பான கற்பனை. அந்தாளைப் பற்றி நம்ம கட்சியில யாரும் பேசக் கூடாது. பேட்டியும் கொடுக்கக் கூடாது. அவரை நாம் ஒரு பொருட்டாவே மதிக்கக் கூடாது. நீங்க கட்சிக்குப் புதுசு! அதனாலதான் உங்களுக்கு இதெல்லாம் தெரியல... நா அறிக்கையில என்ன கொடுக்குறேனோ... அதைத்தான் நீங்கள்லாம் சொல்லணும்'னு அட்வைஸ் பண்ணினாங்க.

'இதுவிஷயமா கட்சியில யாரைக் கேட்கணும்னுகூட எனக்குத் தெரியலியேம்மா'ன்னு கேட்டேன்.

உடனே 'பொன்னையனையும், ஓ.பி.எஸ்--ஸையும் கேட்டுக்குங்க. அவங்களும் சொல்வாங்க'ன்னு அம்மா கனிவா சொன்னாங்க.

ஆனா, அதுக்கப்புறமும் சம்பந்தப்பட்டவங்க என்கிட்டே எதுவுமே சொல்லலைங்கிறது தனிக்கதை!

இது மாதிரி பல சமயங்கள்ல ஜூ.வி. செய்தி தொடர்பா விசாரணைகள் நடந்திருக்கு. அப்பல்லாம் கட்சியின் சீனியர்களான ஓ.பன்னீர்செல்வம், மலைச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் எழுந்திருச்சு, செருப்பைக் கழட்டிப் போட்டு ஸ்கூல் பசங்க மாதிரி ஜெயலலிதாவிடம் பதில் சொன்னது, காலத்துக்கும் மறக்காத காட்சிகள். அவங்க விசுவாசத்துக்கான உச்சகட்ட அடையாளம்னுதான் அதனை எடுத்துக்கிட்டேன். ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் என்கிட்ட இந்த மாதிரி விஷயங்களுக்கு விசாரணைக்காக அழைத்துப் பேசும் போதும், நான் தைரியமாக மனதில் பட்டதைப் பதிலாகச் சொல் வேன்.

என்னை எப்போது அழைத்துப் பேசினாலும், 'மிஸ்டர்' போட்டுத்தான் பேசுவாங்க. அதேபோல உட்கார வச்சுத்தான் பேசுவாங்க. எந்தச் சூழல்லயும் கண்டிச்சுப் பேசுனதேயில்ல... கனிவாத்தான் பேசியிருக்காங்க. அதையும் நான் இங்கே சொல்லியாகணும்.

அடுத்தும் ஜூ.வி. தொடர்புடைய விஷயமே சொல்றேன்... நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பா ஜூ.வி. வெளியிட்ட கவர் ஸ்டோரி போயஸ் தோட் டத்திலருந்து எனக்கு இன்னொரு சம்மன் வாங்கிக் கொடுத்தது.

கார்டன் போனேன். மாடியில ஜெயலலிதா உட்கார்ந் திருந்தாங்க. ஜூ.வி-யில நடிகர் சங்கத் தேர்தல்ல ராதா ரவிக்கு எதிரா நான் பேசி, கொடுத்த பேட்டியை பேனாவால அண்டர்லைன் பண்ணி கையில வச்சுருந் தாங்க. 'நடிகர் சங்கத் தேர்தலில் அ.தி.மு.க. நடிகர்கள் குஸ்தி'ன்னு தலைப்பு போட்டிருந்தது.

என்னைப் பார்த்ததும் உட்காரச் சொன்னாங்க. உடனே நான் 'நடிகர் சங்கத்துல நடந்த ஒரு விஷயத் துல கட்சியை சம்பந்தப்படுத்தி பத்திரிகையில போட்டிருக்கிறதுக்கு நா மன்னிப்பு கேட்டுக்குறேன்'னு சொன்னேன்.

'ஏன் நம்ம கட்சிக்காரரைப் பத்தியே இப்படி எல்லாம் பேட்டி கொடுக்கிறீங்க?'னு கேட்டாங்க. 'நான் என் வாழ்க்கையைத் துவக்கினதே சினிமா வுலதான். என் முகம்தான் மயிலாப்பூர்ல எனக்கு வெற்றியை வாங்கித் தந்தது. கட்சிக்கு என் முகம் ப்ளஸ். அதனால் நடிகர் சங்கத் தேர்தல்ல நடக்குற முறைகேடுகளை வெளியில சொல்லியிருக்கேன். அதுல என்ன தப்பு?'ன்னு கேட்டேன்.

அடுத்ததா, அப்போலோ மருத்துவமனையில அட்மிட்டாகியிருந்த துரைமுருகனை நான் சந்திச்சதா கழுகார் சொல்லியிருந்தாரு.

'எதுக்காக அந்தாளைப் போய் பார்த்தீங்க? நீங்க பார்த்தீங்கன்னு இவங்க நியூஸ் போட்டிருக்காங்களே... அது உண்மைதானா?'ன்னு கேட்டாங்க. 'ஆமாம்மா, நான் துரைமுருகனைப் போய் பார்த்தேன். டி.வி. நியூஸ் வரதராஜன் மனைவியும் அதே மருத்துவமனையில் அட்மிட்டாகியிருந்தாங்க. அவங்களைப் பார்க்கப் போனபோது, பக்கத்து ரூம்ல துரைமுருகன் அட்மிட் ஆகியிருந்தது தெரிஞ்சு அவரையும் பார்த்தேன். நல்லா உடம்பைப் பார்த்துக்கோங்க சார். நீங்களெல்லாம் தெம்பா இருந்தாத்தான், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை சட்டசபையிலயிருந்து வெளியில தூக்கிப் போட முடியும்னு தமாஷா சொல்லிட்டு வந்தேன்' அப்படினு நான் சொல்ல... ஜெயலலிதா டக்குனு சிரிச்சுட்டாங்க. 'இதோ பாருங்க சேகர், உங்களோட இந்த அரசியல் நாகரிகமெல்லாம் டெல்லிக்குத்தான் சரியா வரும். நம்மூர்ல சரிப்படாது'ன்னு சொன்னாங்க.

உடனே நான் 'அதான் நா டெல்லி போறேன்னு சொன்னேன். நீங்கதான் என்னை இங்கே உக்கார வச்சிட்டீங்க'ன்னு சொன்னதும் சிரிச்சிட்டாங்க.

'உங்களைப் பத்தி என்கிட்ட எவ்வளவு பேர் புகார் சொல்றாங்க தெரியுமா? ஆனா நீங்க யார் மேலயும் புகார் தர்றதேயில்லையே?'னு கேட்டாங்க. 'யாரையும் கோள்மூட்டி நா முன்னுக்கு வரணும்ங்கிற எண்ணமில் லம்மா'ன்னு சொன்னேன்.

'கவலைப்படாதீங்க... நா எப்படியும் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டேன்'னு சொன்னாங்க.

ஆனாலும் இப்படியான என்னோட சுதந்திரமான செயல்பாடுகள் எனக்கு எதிரா கட்சித் தலைமையைக் கொஞ்சம் கொஞ்சமா கோபப்பட வச்சுது.

இந்த சமயத்துல சர்வதேசப் பட விழாவுல தயாநிதி மாறனோடு நான் கலந்துகிட்ட ஒரு சம்பவமும் நடந்துச்சு. அதுக்கப்புறம் நடந்த என் பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு ஜெயலலிதா வரலை. நான் என்ன ஏதுன்னு போன் பண்ணி விசாரிச்சேன். அப்ப போயஸ் தோட்டத்துல இருக்குற பூங்குன்றன், 'கல்யாணத்துக்கு அம்மா வந்துடுவாங்க'ன்னு சொன்னார். அதை வெச்சு மீடியாக்காரங்ககிட்ட, 'கல்யாணத்துக்கு அவங்க கண்டிப்பா வருவாங்க!'ன்னு சொன்னேன். அது மறுநாள் செய்தியில, 'ஜெயலலிதா தலைமையில் எஸ்.வி.சேகர் மகள் திருமணம்'னு வந்துச்சு. உடனடியா தலைமைக் கழகத்துலயிருந்து எனக்கு அழைப்பு! ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார்னு மூணு பேர் என்கிட்ட விசாரணை நடத்தினாங்க. 'அம்மாதான் எங்களை உங்ககிட்ட பேசச் சொன்னாங்க'ன்னு ஆரம்பிச்சாங்க. 'உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வரேன்னு அம்மா உங்ககிட்டே சொன்னாங்களா? அவங்க சொல்லாம எப்படி பிரஸ்ல இப்படியரு செய்தி வந்திருக்கு? நாம பத்திரிகை அடிச்சுக் கொடுக்கணும். அதைப் பார்த்து அம்மா வந்தா அது நம்ம பாக்கியம், பெருமை, புரியுதா...' அப்படினு சொன்னாங்க. கூடவே, 'அம்மா ஆசியோடன்னு போட்டு ஒரு பத்திரிகை அடிங்க'ன்னு சொன்னாங்க. 'அது முடியாது சார்! கல்யாணத்தை நடத்துறது என்னோட சித்தப்பா. அவர்கிட்ட அம்மா புகழ் பாடுற மாதிரி பத்திரிகை அச்சடிக்கச் சொல்ல முடியாது. பூங்குன்றன் என்கிட்ட சொன்னதை வச்சுத்தான், பத்திரிகை காரங்க கேட்டபோது, பதில் சொன்னேன். ஒரு கட்சி யோட தலைவி தன்னோட கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வோட மகள் கல்யாணத்துக்கு வருவாங்க என்கிற நம்பிக்கையில நான் சொல்லிட்டேன். அதுல என்னங்க தப்பு?'ன்னு கேட்டுட்டு வந்துட்டேன்.

என் பொண்ணோட கல்யாணத்துக்கு ஜெயலலிதா வரலை. ஆனா, அதே சமயத்துல சென்னையில நடந்த வேறொரு கல்யாணத்துக்கு கொடநாட்டிலிருந்து பறந்து வந்து கலந்துகிட்டு திரும்பிப் போனாங்க. என் பொண்ணு கல்யாணத்துக்கு அ.தி.மு.க-வுல இருக்கற ஏழு எம்.எல்.ஏ-க்கள் வந்தாங்க. மனப்பூர்வமா வாழ்த்திட்டுப் போனாங்க. வைகோவும் வந்திருந்தார்.

நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்னு அவங்க வரலை என்பதற்கான விடை இன்னிக்கு வரைக்கும் எனக்குக் கிடைக்கல..!

கிட்டத்தட்ட அதுலயிருந்து நான் சுத்தமா ஓரங் கட்டப்பட்டேன்னு சொல்லலாம். அடுத்து நடந்த செயற்குழுவுக்கும் பொதுக்குழுவுக்கும் எனக்கு அழைப்பில்லை. மீடியாக்கள் கவனம் என் பக்கம் திரும்பியது. என்னோட நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பிச்சாங்க.

அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிற அன்று நான் கோட்டைக்குப் போனேன். அன்னிக்கு காலையிலேயே, 'எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா பண்ணப் போறேன்'னு ஒரு செய்தி கிளம்புச்சு. நான் கோட்டைக்குள்ள போகும்போது, ஒருத்தர் வந்து என் கையைப் பிடிச்சார். 'வாங்க சார்... எதுனாலும் பேசிக் கலாம். வாங்க, அம்மாவைப் பார்க்கலாம்'னு சொன்னார். 'நீங்க யாருங்க?'ன்னு கேட்டேன். 'நான்தான் எம்.ஆர்... எம்.நடராஜனோட தம்பி. இதோ அண்ணனோட கார்லதான் வந்திருக்கேன், பாருங்க..! உங்களை உடனடியா அம்மாகிட்ட கூட்டிட்டுப் போகச் சொன் னார்!'னு சொன்னார்.

அப்ப வானகரத்துல இருக்கற ஒரு மண்டபத்துல அ.தி.மு.க-வோட பொதுக்குழு நடந்துட்டிருந்துச்சு. வற்புறுத்தி என்னை கார்ல ஏத்தினாங்க. போகும்போது நடராஜன் லைன்ல வந்தார். 'என்ன சேகர்... இப்படியரு முடிவு எடுத்துட்டீங்க? அந்தம்மா எப்பவுமே இப்படித்தான் செய்வாங்க. அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். நீங்க முதல்ல அந்தம்மாவைப் பாருங்க!'ன்னு சொன் னாரு. எனக்கு தலை சுத்துச்சு. நடராஜன் நடத்துற பத்திரிகை விழாவுல கலந்துக்கப் போனவனை தடுத்து, அவருகூட பேசக் கூடாது, அவரை சந்திக்கக் கூடாதுன்னு ஜெயலலிதா சொல்றதா ஜெயலலிதாவின் செயலாளரே சொன்னாரே... அங்கேதானே என்னைச் சுத்தி அரசியல் விளையாட்டே ஆரம்பமானது! இப்ப ஜெயலலிதாவுக்கு உபகாரமா நடராஜனே கார் அனுப்புறார்..!

ஆக, அ.தி.மு.க-ங்கறது ஒரு மாயக் கோட்டை..! அங்க எப்ப என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது..!

கார் நேரா வானகரம் போனது. பொதுக்குழு முடிஞ்சு கிளம்பிய ஜெயலலிதாவை சந்தித்து வணக்கம் வைத்தேன். என்னைப் பார்த்தவங்க, 'என்ன சேகர், இவ்வளவு லேட்டா வர்றீங்க?'ன்னு கேட்டாங்க. 'எனக்கு அழைப்பே இல்லேம்மா'ன்னு சொன்னேன். உடனே, காருக்கு பின் ஸீட்டுல இருந்த சசிகலாவை முறைச்சுப் பார்த்தாங்க. 'எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் சேகர்..! நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, நான் இருக்கேன்..! நீங்க உள்ள போய் சாப்பிடுங்க!'ன்னு சொன்னாங்க. சசிகலாவைப் பார்த்து ஜெயலலிதா முறைச்சதுல ஏக அர்த்தம் இருந்தது. என்னைக் கட்சியில ஓரங்கட்டுறது, எனக்கு கட்சியோட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பாததுன்னு எல்லாத்துக்குமே சசிகலாதான் காரணம்னு ஜெயலலிதா மனசுல பட்டிருக்கு. வெகுநாளா மனசுக்குள்ளே இருந்த உறுத்தல்தான் இப்படி முறைப்பாக வெளிப்பட்டிருக்குனு நினைச்சுக்கிட்டேன்.

பொதுக்குழு நடந்த மண்டபத்தில் சாப்பாடு போட்டார்கள். மண்டபத்தில் செங்கோட்டையன், ஜெயகுமார், ஓ.பி.எஸ். மூன்று பேரும் எனக்காகவே காத்துட்டு நின்னாங்க. செங்கோட்டையன் இலை போட, ஓ.பி.எஸ். அதுல தண்ணீர் தெளிக்க, ஜெயக்குமார் எனக்கு சாதம் பரிமாறினார். கிட்டத்தட்ட அதுதான் நான் கலந்துகிட்ட கடைசி கட்சி ஃபங்ஷன் - அதுவும் சர்வ மரியாதையோட! அதுக்குப் பிறகு என் தொகுதியிலேயே நடந்த நிகழ்ச்சிகளில் என் பேரைக்கூட போடாம போஸ்டர் அடிச்சாங்க. என்னை மானசீகமா கட்சியிலயிருந்து ஓரங்கட்டிட்டாங்க! எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டு, ஜெயலலிதாவுக்கு பதினாறு கடிதம் போட்டேன். எதுக்கும் பதில் இல்லை..!

என்னைப் பொறுத்த வரைக்கும், ஜெயலலிதா நல்ல தலைவர்தான். ஜெய லலிதாவை எந்த சூழ்நிலையில் நான் சந்தித்திருந்தாலும் அது மனதுக்கினிய சந்தர்ப்பங்களே... ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் மிகவும் நல்லவர். அதனால்தான் என்னாலும் கட்சியில் இவ்வளவு காலம் இருக்க முடிந்தது. ஆனால், அவரை ஒரு சிறந்த கட்சித் தலைவராக செயல்படவிடாமல் சில சக்திகள் தடுக்கிறது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்தேன்.

நான் அவங்களோட சில பிரச்னைகள்ல முரண்பட்டதையும் ஆரோக்கியமா எடுத்துக்கிட்டாங்க. சகிப்புத்தன்மையும் இருந்தது. 'அவங்களுக்குக் கட்சிதான் குடும்பம், தமிழ்நாடுதான் சொந்தம்'னு வெளியே நிலவுகிற பேச்சும்கூட தவறில்லை.

ஆனா, குடும்பமே இல்லாத ஜெயலலிதாவை ஒரு குடும்பம் ஆட்டிப் படைப்பதும்... அந்தக் குடும்பத்தின் விருப்பு - வெறுப்புகளை மீறி இறுதி முடிவுகள் எடுக்க முடியாம அவங்க தவிக்கிறதும் மிகமிக நிதர்சனம்! இன்னிக்கு அ.தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியா இல்லாததுக்கும், ஒவ்வொருத்தரா அந்தக் கட்சியிலயிருந்து நீக்கப்பட்டு வருவதற்கும் - ஓப்பனா சொல்றேனே - சசிகலாதான் காரணம்..! தி.மு.க-வுலயும் குடும்ப அரசியல் நடக்கறதா விமர்சனம் இருக்கு. ஆனா, 'கலைஞர் கருணாநிதி போல நமக்கு ஒரு தாத்தா இல்லையே... அப்பா இல்லையே'ங்கற ஏக்கம் ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது மூலையில் இருக்கும்.

ஜெயலலிதாவுக்கும் அப்படி ஒரு குடும்பம் இருந் திருந்தா, எல்லோரையும் போல அவங்களும் அந்த சொந்தபந்தங்களின் பழக்கத்தில் இருந்திருந்தா... ஒரு வேளை, அ.தி.மு.க. இன்னிக்கும் வலுவான, எம்.ஜி.ஆர். இருந்தப்ப என்ன பவர்ல இருந்ததோ, அதைப் போன்ற இயக்கமாகவே தொடர்ந்து இருந்திருக்கும்றது என் எண்ணம்.

நடந்தவை நல்லதே... இனி நடக்கப் போவதும் இதைவிட நல்லதாகவே இருக்கும்.

God is with us. No one is against us!

என்றும் அன்புடன், எஸ்.வி.சேகர்.
தொகுப்பு எஸ்.சரவணகுமார்