Published:Updated:

மதுவிலக்கு ரத்தால் கலைஞர் குற்றம் செய்ததாக சொல்வது சரியல்ல: மனம் திறந்த தா.பாண்டியன்

மதுவிலக்கு ரத்தால் கலைஞர் குற்றம் செய்ததாக சொல்வது சரியல்ல: மனம் திறந்த தா.பாண்டியன்
மதுவிலக்கு ரத்தால் கலைஞர் குற்றம் செய்ததாக சொல்வது சரியல்ல: மனம் திறந்த தா.பாண்டியன்

மதுவிலக்கு ரத்தால் கலைஞர் குற்றம் செய்ததாக சொல்வது சரியல்ல: மனம் திறந்த தா.பாண்டியன்

மதுவிலக்கு ரத்தால் கலைஞர் குற்றம் செய்ததாக சொல்வது சரியல்ல: மனம் திறந்த தா.பாண்டியன்

கோவை: "மதுவிலக்கை ரத்து செய்ததன் மூலம் கருணாநிதி குற்றம் இழைத்து விட்டதாக யாரும் கருத முடியாது. அன்றைய சூழலில் அதை செய்ய வேண்டியிருந்தது. அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் மனம் திறந்துள்ளார்.

தமிழகத்தில் மதுவிலக்கு தேவை என்பது வெகுஜன மக்களின் கோரிக்கையாக மாறிவிட்ட நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த மறுப்பதாக அ.தி.மு.க. மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாய் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் என்றும், அவர் செய்த தவறு தான் தற்போது மதுவை அரசே விற்கும் சூழலை ஏற்படுத்தி விட்டதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்குமேயானல் மதுவிலக்கு அமலாக்கப்படும் என கருணாநிதி அறிவிக்க, இந்த விமர்சனம் பரவலாக எழுந்தது. பல முதல்வர்கள் ரத்து செய்ய மறுத்த மதுவிலக்கை ரத்து செய்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, மதுவிலக்கை மீண்டும் கொண்டு வருவேன் என அறிவிப்பது கடுமையாக விமர்சிக்கப்பட, கருணாநிதி அன்று எடுத்த முடிவு சரியான முடிவு தான் என மனம் திறந்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்.

கோவையில் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழகத்தில் நீண்ட காலம் மதுவிலக்கு அமலில் இருந்தது. பக்தவச்சலம், காமராஜர், அண்ணா என பல முதல்வர்கள் மதுவிலக்கை ரத்து செய்ய வில்லை. கலைஞர் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்கு கூட மதுவிலக்கு இருந்தது. அப்போது, சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்துபவர்களின் திருவிளையாடல்கள் பொறுக்க முடியாமல், கள்ளச்சாராய சாவுகளை கட்டுப்படுத்த முடியாமல் போக அதைவிட கடைகளை திறந்து வைப்பதே நல்லது என்ற முடிவு சட்டமன்றத்தில் எடுக்கப்பட்டது. அதை அன்று இருந்த சூழலில் அனைத்து கட்சிகளும் வரவேற்றன. நாங்களும் கூட வரவேற்றோம்.

எனவே, அன்று கலைஞர் குற்றம் செய்துவிட்டதாக சொல்வது சரியல்ல. காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராயத்துக்கு ஓரே நேரத்தில் 45 பேர் பலியாக, மதுக்கடைகளை அரசு எடுத்து முறைப்படுத்தி நடத்தலாம் என்ற அடிப்படையில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. ஆனால், இன்று அது பொருளாதார நிதி வரவு துறையாக மாறி இருக்கிறது. மதுவிலக்கை மீண்டும் அமலாக்க வேண்டும் என கலைஞரிடம் கேட்டபோது, 'சுற்றிலும் நெருப்பு சூழ சூடமாய் நிற்கிறேன்' என கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் மதுவிலக்கு இல்லாதபோது இங்கு மட்டும் எப்படி மதுவிலக்கை அமலாக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதே நிலை தான் இன்றும் இருக்கிறது. இதை இப்போது விவாதம் செய்வது சரியல்ல. மதுவிலக்கை அமலாக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதைச் செய்ய வேண்டும். அதை அகில இந்திய அளவில் செய்வது தான் வெற்றியைத் தரும். ஒரு ஊரில், ஒரு தெருவில் இதை அமல்படுத்த முடியாது. அகில இந்திய அளவில் மதுவிலக்கை அமலாக்கி, மது தயாரிப்பு ஆலைகளை இழுத்து மூடி விட வேண்டும்" என்றார்.

ச.ஜெ.ரவி

அடுத்த கட்டுரைக்கு