Published:Updated:

மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!

மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!

மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!
அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!
மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்பென்ஸ் வைப்பது கழுகாருக்கு சர்பத் சாப்பிடுகிற மாதிரியாச்சே!

''விளக்கேற்ற வந்த மருமகளுக்கும் சந்தோஷம்... கூட்டணி போட்ட காங் கிரஸுக்கும் உற்சாகம்... இப்படி ஒரே கல்லில் இரு காய்கள் வீழ்த்த வேறு யாரால் முடியும்?'' என்று கேட்டார்வந்து கொண்டே!

''முதல்வரைப் பற்றி ஏதோ சொல்ல வருகிறீர்...'' என்று பாதி யூகித்தோம்.

''ஆம்! திருமதி சாந்தாஸ்டாலினுக்கு மனமுவந்த தெய்வம் நரசிம்மர் தமிழகத்தில் அவர் பாதங்கள்படாத நரசிம்மர் கோயில்கள் குறைவு. இப்படி யிருக்க, சோளிங்கர்

தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அருள் அன்பரசு, வெகுநாளாகத் தன் தொகுதியில் மலைமேல் வீற்றிருக்கும் நரசிம்மரை தரிசிக்க ரோப் கார் அமைத்துக் கொடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார். 'வயதான பக்தர்கள் படியேறும் சிரமத்தைக் குறைக்க மாட்டீர்களா?' என்று சட்டமன்றத்தில்திரும்பத் திரும்பக் கோரிக்கை வைத்தார். ஒரு வழியாக முதல்வர் இப்போது மனசு வைத்துவிட்டார். சோளிங்கர் நரசிம்மர் ஆலயத்துக்கு ரோப் கார் அமைக்கும் பணிக்கென அரசு ஆணை பிறந்தேவிட்டது!'' என்றார் கழுகார்.

மழைக்கு இதமாக இஞ்சி காபி வரவும்... குடித்து முடித்துவிட்டுக் கணகணப்பான குரலில் அடுத்த செய்திக்குப் போனார்.

''ஷாரூக் கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த சோதனையே ஒரு வேதனை என்றால்... நம்மூரில் சத்தமில்லாமல் சிலரை விமான நிலையத்தில் வரவேற்று வழியனுப்பி வைப்பதுதான் சாதனையே! சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட ஸ்தலங்களின் இமிகிரேஷனுக்குப் பொறுப்பான ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி பற்றித்தான் இந்த புகார். உள்துறை அமைச்சரோ, முதல்வரோ சென்னை விமான நிலையம் வரும்போது கூட, கண்டு கொள்ளாதவர் இந்த அதிகாரி! 'துபாயிலிருந்து யாரோ குவைத் ராஜா என்பவர் சென்ற வாரம் சென்னை வந்திறங்கிய போது, அவரை வரவேற்று பத்திரமாக வழியனுப்பி வைத்தது ஏன்?' என்று மத்திய உளவுத் துறைக்கு மொட்டைக் கடுதாசி போட்டிருக்கிறார்களாம். குவைத் ராஜாவுக்கும் இந்த போலீஸ் அதிகாரிக்கும் உள்ள கனெக்ஷன்களை உளவுத்துறை தோண்டிக் கொண்டிருக்கிறது!''

''யார் யார்க்கு என்ன வேஷமோ...'' என்று நாம் ராகம் போட்டுப் பாடவும்...

''அ.தி.மு.க-வில் திடீரென்று அம்மா காட்டத் தொடங்கியிருப்பது நிஜமான பாசமா, அல்லது காலத்துக்கேற்ற வேஷமா என்று ஒரு திடீர் பட்டிமன்றம் தொடங்கியிருக்கிறது. ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அ.தி.மு.க-வின் முக்கியஸ்தர்களுக்கு கொடநாட்டிலிருந்து அவசர அழைப்பு வந்ததாம். ஜெயலலிதா பேரவையை வலுப்படுத்தி, அதன் மூலம் கட்சிக்குள் திறமையானவர்களுக்கு எப்படியெல்லாம் பதவிகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று ஆலோசனை நடந்த தாம். அந்த சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கிய சீனியர்கள் சிலரிடம் ஜெயலலிதா, குரலில் ஏக கனிவு காட்டிப் பேசினாராம். 'கட்சியில் மூத்தவர்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை என்று உங்கள் நண்பர்களிடம் நீங்கள் சொல்லி வருவது எனக்கும் தெரியும். அப்படியெல்லாம் இல்லை. எனக்கு எல்லோருமே முக்கியம்!' என்று சொன்னாராம் மேடம். அன்றைக்கே தூத்துக்குடி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் சம்மன் செய்து, 'தி.மு.க-வுக்குப் போன அனிதா ராதாகிருஷ்ணனை நம்பி, அவர் பின்னால் போய்விடாதீர்கள். அவரை அந்தக் கட்சி கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிவதைப் பார்க்கத்தான் போகிறீர் கள். என்னை நம்புங்கள். உங்களுக்கான மரியாதை இங்கே தாராள மாகக் கிடைக்கும்...' என்று சொன்னாராம்!''

''அடடா... என்னவொரு மாற்றம்! எத்தனை நாள் இந்தத் தோற்றம்!''

''இதே கேள்வியைத்தான் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். 'என்னதான் அம்மா சீராகக் கட்சியை நடத்த நினைத்தாலும், அவருக்குத் தொடர்ச்சியாக சிலர் தப்பான யோசனை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்...' என்று வருந்து கிறார்கள். கட்சித் தலைமை சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு

போராட்ட அறிவிப்பை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள்...''

''அதென்ன அறிவிப்பு?''

'''இப்போது நடக்கும் அரசை மைனாரிட்டி அரசு என்றுஜெயலலிதா

மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!

அழைக்கிறார். அப்படி சொல்வதை நிறுத்தும் வரையில் நானும் அவரை திருமதி ஜெயலலிதா என்றுதான் அழைப்பேன்' என்று நிருபர்களிடம் சொல்லியிருந்தார். இது அப்படியே பத்திரிகைகளில் ரிப்போர்ட் ஆக, இதற்கு நிச்சயம் எதிர்ப்பு காட்டி போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்று ஜெ-வுக்கு ஆலோசனை சொன்னார்களாம். அதைத் தொடர்ந்து வளர்மதி உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. 'எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து தரம் தாழ்ந்து ஏதாவது விமர்சனம் வந்தால், அதை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் அழகு. இதை ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்ததால்தான் முரசொலியில் அடுத்தகட்ட ஃபிளாஷ்பேக் தாக்குதலுக்குப் போயிருக்கிறார்கள். இதெல்லாம் தேவைதானா?' என்பதுதான் கட்சியின் உண்மை விசுவாசிகள் சொல்லும் கருத்து!''

''அதானே..!''

''கொடநாட்டின் மூவ்களை அறிந்த வேறு சிலரோ, 'முரசொலியில் தாக்கட்டும். பதிலுக்கு அம்மாவும் தயார்தான். பெங்களூருவில் பத்து நாள் தங்கியிருந்த

மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!

கருணாநிதி, அங்கே போட்டுவிட்டு வந்திருக்கும் ரகசிய ஒப்பந்தங்கள் தொடர்பான ஆதாரங்களை, தன்னுடைய பி.ஜே.பி. நண்பர்கள் மூலம் ஜெயலலிதா வாங்கி வைத்திருக்கிறார். அதோடு, அவரிடம் கிடைத்திருக்கும் ஒரு சி.டி. ஆதாரத்தையும் எப்படிப் பயன்படுத்துவது என்று யோசித்து வருகிறார்' என்கிறார்கள் பதிலுக்கு!''

''அப்பப்பா... ஸ்வைன் ஃப்ளூவைவிட ஆபத்தாகிவிட்டதே அரசியல்!'' என்று நாம் உச்சுக் கொட்ட...

''நல்லவேளை நினைப்பூட்டினீர்...'' என்று சுதாரித்த கழுகார்,

''பன்றிக் காய்ச்சல் பீதிக்கு முதல்வர் அலுவலகம் மட்டும் விதி விலக்கா, என்ன! முதல்வரை சந்திக்க வரும் நபர்களிடம், 'கைகளைப் பற்றிக் குலுக்க வேண்டாம். முதல்வரைத் தொட வேண்டாம். அங்கே தும்மலோ இருமலோ வந்தால், சற்று தள்ளி வந்துவிடுங்கள்' என்று வகுப்பு எடுத்த பிறகே, சந்திக்க அனுமதிக்கிறார்களாம். சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் பர்னாலா அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வந்த முக்கியஸ்தர்கள், முதல்வரிடம் நாலு வார்த்தை பேசவேண்டும் என்று ஆசைப்பட... அவர்களுக்கும் இதே போன்ற அறிவுரைகள் வந்து விழுந்ததாம். அதன்படியே வந்தவர்களும்சுகாதார எச்சரிக்கை காட்டினர். நடிகர் எஸ்.வி. சேகரும் எட்ட நின்றே வணக்கம் வைக்க... முதல்வரோ சட்டென்று அவர் கையைத் தானே பற்றிக் குலுக்கினார். செக்யூரிட்டிகள்தான் பாவம்... முழித்து விட்டார்கள்!''

''அண்மையில் தி.மு.க. பக்கம் வந்த அனிதா பற்றி ஏதேனும் தகவல் வைத் திருப்பீரே?''

கேட்டதும் கொடுத்தார் தகவலை.

''அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த அனிதா, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க.

மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!

புள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி போட்டு அவர்களையும் தி.மு.க-வுக்குத்தள்ளிவரத் திட்டமிட்டிருந்தார்ஆனால், தொண்டர் களைத் திரட்டிவர முடிந்தவருக்கு, நிர்வாகிகளை நகர்த்துவது தள்ளிப் போகிறதாம். இதற்கிடையில் அடுத்த அசைன்மென்ட்டாக கன்னியாகுமரி மாவட்டத்தை அனிதாவிடம் கொடுத்திருக் கிறாராம் அழகிரி. முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் பச்சைமால் ஆகியோருக்கு எதிராகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள், இப்போது அனிதாவின் பாசவலைக்குள் வந்து கொண்டிருக்கிறார்களாம். ஒரு முன்னாள் அமைச்சர், முன்னாள் மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் பிரிவு புள்ளிகள், நாகர்கோவில் நகரப் பொறுப்பாளர்கள் சிலர் என பெரும் படையே அழகிரியை சந்தித்து தி.மு.க-வுக்கு நகரத் தயாராகிவிட்டதாம்...''

''அண்ணன் நியூஸ் ஓகே.!முதலமைச் சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக் கிறாரே தம்பி?'' - நாம் முடிப்பதற்குள் முந்திக்கொண்டார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: அம்மாவின் 'திருமதி' எரிச்சல்!

''துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி போனது பற்றிக் கேட்கிறீரா? முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி போன்றோர் டெல்லிக்கு வரும்போதெல்லாம்... தமிழக அரசியல் பாணியில் டெல்லி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது வழக்கம் இல்லை. ஆனால், மு.க.ஸ்டாலினை வரவேற்று தி.மு.க. நாடாளுமன்றக் கட்சி சார்பில் ஆங்கில பத்திரிகைகளில் பிரமாண்டமாக விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதே மாதிரி நடு இரவில் விமான நிலையத்தில் டாம்பீகமான தாரை தப்பட்டை கூடிய வரவேற்பும் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்துக்குப் பின்னர் அரசியல் ரீதியான சந்திப்புகளையும் கூட்டங்களையும் டெல்லியில் தொடங்கினார் மு.க.ஸ்டாலின். முதலில் சோனியா காந்தியை சந்தித்தார். அடுத்து பிரதமரையும் சந்திக்கக் காத்திருந்தார். இரவில் தமிழ்நாடு பவனில் தங்கி நண்பர்களை சந்தித்தவர், பகலில் அக்பர் ரோட்டிலுள்ள தயாநிதி மாறன் வீட்டில் ஆலோசனைகளை நடத்தினார்...''

''கூட்டத்தில் ஏதேனும் சிறப்பு உண்டா?''

''கடந்த 16-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் முதலமைச்சர்கள் அடங்கிய கூட்டம். இரண்டாம் நாள் உள்நாட்டுப் பாதுகாப்பு, வறட்சி சம்பந்தமான முதலமைச்சர்கள் கூட்டம். இந்த இரு கூட்டங்களுக்கும் தமிழகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் வரவில்லை. இரண்டாம் நாள் உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் உள் துறையை கவனிக்கும் முதலமைச்சர் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியைப் போன்ற மூத்த முதல்வர்கள் முதல் வரிசையில் அமர வைக்கப்படுவார்கள். தமிழகத்தின் சார்பில் வந்திருந்த மு.க.ஸ்டாலின், மாநில பெயர் வரிசைப்படி பின் வரிசையில் அமர்ந்திருந்தார். கருணாநிதியின் லேட்டஸ்ட் 'தம்பி' எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் எழுந்துபோய் மரியாதை செய்தார். இந்த கைகுலுக்கலில் கேரள முதல்வரை ஏனோ மிஸ் செய்துவிட்டார்!'' என்ற கழுகார்,

''ஈரோட்டில் நில ஆக்கிரமிப்பு, கடத்தல் விவகாரத்தில் சிக்கித் தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்த என்.கே.கே.பி.ராஜா மீதான போலீஸ் பிடி ரொம்பவே இறுகுகிறதாம். இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார், இந்தப் பிரச்னையின் மையப் புள்ளியான சிவபாலன் என்பவர் போலீஸில் சரணடைந்த பின்னால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முனைப்பில் இருக்கிறார்கள். இதில் பிரதான குற்றவாளியாக என்.கே.கே.பி. ராஜாவையும் சேர்க்க முடிவெடுத்து விட்டார்களாம். இந்தச் சூழ்நிலையில்தான் சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மேலிடத்திலிருந்து பிரஷர் மேல் பிரஷர் வருகிறதாம். அதுமட்டுமல்ல, ராஜா தரப்பினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், ஏற்கெனவே போலீஸ் துறையில் ராஜா தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் என்று சொல்லி, குறிப்பிட்ட அந்த போலீஸாரையும் குற்றப் பத்திரி கையில் சேர்க்கவேண்டும் என்று ராஜா தரப்பு ஆட்கள் அரசல் புரசலாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம்.... அப்படிச் செய்யாத பட்சத்தில், போலீஸுக்கு எதிரான ஸ்டேட் மென்ட்கள் ராஜா தரப்பிலிருந்து கசிய ஆரம்பிக்குமாம்... இதனால், தலையைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ்...'' - சொல்லி முடித்த கழுகாரை நாம் பார்த்துக் கொண்டே இருக்க, வானத்தோடு சிறகு குலுக்கிக் கொண்டிருந்தார்.