Published:Updated:

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்:சோனியா காந்தி!

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்:சோனியா காந்தி!
நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்:சோனியா காந்தி!

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்:சோனியா காந்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்:சோனியா காந்தி!

புதுடெல்லி: ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாற்றுகளுக்கு ஆளாகியுள்ளவர்கள் பதவி விலகும்வரை    நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்தவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21 ஆம் அதேதி தொடங்கியது. ஆனால் இந்தக்  கூட்டத் தொடர் இதுவரை ஒருநாள் கூட முழுமையாக நடக்க வில்லை. லலித்மோடிக்கு உதவியதற்காக மத்தியயமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர்  வசுந்தரா ராஜே சிந்தியா, வியாபம் ஊழல் முறைகேட்டிற்காக மத்திய பிரதேச முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலகும் வரை நாடா ளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று காங்கிரஸ் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகிறது.

நாடாளுமன்ற முடக்கத்தை போக்க பாரதீய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் அவற்றுக்கு எந்த பலனும் கிடைக்க வில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டு பேசுகையில்,

நாம் மிகவும் முக்கியமான ஊழல் பிரச்சினைகளை வெளிப்படுத்தி உள்ளோம். மிகவும் வலுவான ஆதாரங்களுடன் இந்த குற்றச்சாட்டுக்களை நாம் எழுப்பியுள்ளோம். ஆனால் பிரதமர் இது தொடர்பான விஷயங்களை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். அவர் சட்ட திட்டங்களை மீறுகிறார்.

அவர் நாட்டு மக்களுக்கு நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால் அவற்றில் இதுவரை ஒன்றைக்கூட அவர் நிறைவேற்ற வில்லை என்றாலும் அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம், கடமை தவறாதவர் போல தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

ஊழலில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று கூறினால் முதலில் விவாதிப்போம், பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு விரும்பவில்லை. பாஜகவின்  இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள இயலாது.

பாராளுமன்ற மக்களவையில் பாஜகவுக்கு  பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த கட்சி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதற்கு பதில் ஆணவத்துடன் நடந்து கொள்கிறது. வெறும் விவாதம் நடத்தி நமது குற்றச்சாற்றுக் களை  புறம் தள்ள முயற்சி நடக்கிறது. பிரதமர் தனது மௌனவிரதத்தைக் கைவிட வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி ஏற்கெனவே நாங்கள் போட்ட ஒப்பந்தங்களை மீண்டும் போட்டு வருகிறார். அவர் திறமையான வியாபாரி. தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கிறார். செய்திகளை கையாள்வதில் புத்திசாலி.

ஆனால் மௌனமாக இருந்து தன் வெளியுறவுத்துறை அமைச்சரையும்  இரண்டு முதல்வர்களையும் காப்பற்ற நினைக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ‘‘முதலில் ராஜினாமா, பிறகு விவாதம்’’ என்ற கோஷத்தை பாரதீய ஜனதா எழுப்பியது. 5 சம்பவங்களில் பாஜக  அப்படி நடந்து கொண்டது. அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம். எனவே குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் ராஜினாமா செய்யும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்" என்று கூறியுள்ளார்.



 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு