Published:Updated:

ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?

ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?
ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?

ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?

த்தனை போராட்டங்களுக்குப்பிறகும் இன்னும் தமிழக அரசிடமிருந்து டாஸ்மாக் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. அறிவிப்பை விடுங்கள். இன்னமும் மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து ஒரு விளக்கமும் வரவில்லை. அப்படியானால் இனியும் இந்த டாஸ்மாக் அரக்கனை தமிழகத்தில் உலவ விட்டு தமிழர்களின் வாழ்வை சூறையாடப்போகிறதா அரசு?

தமிழக அரசின் கூற்றுப்படி, மதுக்கடைகளை மூடினால் 

*முப்பது ஆயிரம் ரூபாய் அரசு வருவாய் இழப்புதான்;

அரசு வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இழப்புதான்; மக்களுக்கான இலவசத் திட்டங்களுக்கு மானியம் கூட கிடைக்காதுதான்;

*மாணவர்களின் கல்வித் திட்டங்களுக்கு நிதிப்பற்றாக்கு ஏற்படும்தான்;

*கள்ளுக்கடைகள் பெருகி கள்ளச் சாராயம் வினியோகிக்கப்படும்தான்;

*மது நுகர்வோர் பழக்கத்திற்கு அடிமையாகி நோயாளிகளாய் திரிவார்கள்தான்;

*அரசு நிறுவனத்தின் 6823 மதுபானக்கடைகள், 41 மதுபான கிடங்குகளில் வேலைச் செய்யும் 29,297
பணியாளர்களின் வாழ்வாதாரம் சிதைந்துவிடும்தான்; ஒப்புக் கொள்கிறேன்!

ஆனால் உண்மையில்,

** அந்த முப்பதாயிரம் கோடி ரூபாய் தமிழக குடும்பங்களில் புழஙகும், பொருளாதார சூழ்நிலை உயரும், அதனால் மக்களுக்கு எந்த இழப்பும் இல்லை!

** தமிழக மக்களின் நுகர்வு கலாச்சாரம் பெருகும், அதனால் அரசின் இலவச மானியங்கள் தேவைப்படாது!

** இளையச் சமுதாயமே மதுவினால் சீரழிந்து கொண்டிருக்கும் வேளையில், மாணவர்களுக்கான எந்த கல்வித் திட்டத்தை முன்னேற்ற போகிறது இந்த அரசு?

ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?



** கள்ளுக்கடைகளையும் என்ன அரசு நிறுவனமா நடத்தும், தனிமனித அக்கறையில்லாதவன்தான் நடத்துவான், அவன் கள்ளச்சாராயம் காய்ச்சினால் அதனை தடுக்க இயலாத அரசிடம்    சட்ட ஒழுங்கும் காவல்துறையும் இருந்து என்ன பயன்?

**மது குடித்து குடித்து செத்து மடிவதைக் காட்டிலும், நோயாளிகளாய் அவர்களை நாம் குணப்படுத்தலாம்!

**அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு அரசே அரசு வேலைதான் தரும், ஆனால் மதுவிலக்கு அமல்படுத்தினால் ஏழறை கோடி தமிழக மக்களுக்கு வாழ்வாதாரமே உயரும்!!!

ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?

முப்பது ஆயிரத்துக்கும் குறைவான பணியாளரைக் கொண்டு முப்பது ஆயிரம் கோடி வருவாயை இலக்காய் அரசு நிர்ணயிக்க முடியும் என்றால், நம் தமிழகத்தில் உள்ள இளைஞர்களை இவர்கள் நல்வழிப்படுத்தி தொழிற்துறை மற்றும் விவசாய வளர்ச்சிக்கு உதவினால், இலக்கற்ற வருவாயை ஈட்ட முடியும் அல்லவா?

மக்கள் முதல்வர், தமிழக அரசை காப்பாற்றுவாரா, இல்லை தமிழக மக்களை காப்பாற்றுவாரா? மக்கள் நலன் காக்க சேவைகள் செய்யதான் அரசும், அரசு ஊழியர்களும்,
 

ஆனால் இன்று அரசு மற்றும் அரசு சார்ந்த் துறைகளின் நலன் காக்க மக்களுடைய சேவையை அரசே எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் நலனே தேவையில்லை என்றால், தாராளமாக தமிழக அரசின் முதல்வராகவே செயல்படடும், மக்களின் முதல்வர் என்ற பட்டத்தை துறந்து!

 - பலராமன்
  தமிழகத்தில் உடனே மதுவிலக்கை அமல்படுத்த என் ஆதரவு: http://bit.ly/1gsKqKe

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரலுக்கு வலு சேர்க்கவும், அவை அரசின் கதவைத் தட்டவும் உங்கள் குரலை வாக்காக பதிவு செய்யுங்கள். பதிவு செய்தவர்கள் நண்பர்களுக்கு Share செய்க..http://bit.ly/1gsKqKe


ஜெயலலிதா மக்களின் முதல்வரா, மாநில முதல்வரா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு