ஏப்ரல் 18-ம் தேதி துவங்கி... மே மாதம் 10-ம் தேதி வரை ஆறு

. கட்டங்களாக மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜியே முதல்வர் என்பதுபோல ஒரு தோற்றம் அந்த மாநிலத்தில் உருவாகிவிட்டது. 'மம்தாவின் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை?’ என்ற விவாதங்கள் ஒரு பக்கம் ஜோராக நடைபெற... இன்னொரு புறம், 'முதல்வர்’ மம்தாவை எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகளைப் பட்டியல் போட்டு, 'இவற்றை அவர் எப்படி அணுக வேண்டும்!’ என்று 'நீயா? நானா?’ டைப்பில் மேற்கு வங்க மக்கள் விவாதங்கள் நடத்துகிறார்கள்! .
இன்னும் சரியாகச் சொல்வது என்றால், 'அடுத்த முதல்வர் மம்தா!’தான் என்பது 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை, மம்தா மண்ணைக் கவ்வவைத்தபோதே முடிவாகிப் போனது.

ஆம்! 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைச் சட்டசபைத் தொகுதிவாரியாக ஆய்ந்தால், மொத்தம் இருக்கும் 294 சட்டசபைத் தொகுதிகளில் 195

இடங்களில் கம்யூனிஸ்ட் கூட்டணியை மம்தா காலி பண்ணிவிட்டார். அதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த கையோடு சட்டபைத் தேர்தலும் நடந்தால், 'காற்றடிக்கும்போதே தூற்றிக்கொள்ள முடியும்’ என்று மம்தா நினைத்தார். ஆனால், அது நடக்க வில்லை. அரசியல் சதுரங்கத்தில் நந்திகிராம், சிங்கூர்... என்று அடுத்தடுத்து தப்புத் தப்பான 'மூவ்’களை எடுத்துவைத்தது மார்க்சிஸ்ட் கட்சி. ஆட்சியாளர்களைவிட, அந்தக் கட்சியினர்தான் மேற்கு வங்கத்தின் அதிகார மையங்களாகச் செயல்பட்டனர். கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆட்சி செய்த மமதையில், கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு அதிகார வெறி தாண்டவம் ஆடியது. எதிர்ப்புகளைச் சமாளிக்க துப்பாக்கி துவங்கி 'உருட்டுக் கட்டை’ பஞ்சாயத்து வரை நடத்தினார்கள். அங்கே பல ஊர்களில் மார்க்சிஸ்ட் கட்சியினரிடம்தான் உண்மையான அதிகாரம் இருந்தது. அவர்கள் வைத்ததே எழுதப்படாத சட்டமாகவும் இருந்தது. இதை ஓரளவு புரிந்துகொண்ட அந்தக் கட்சி, மாநிலம் முழுதும் 23 ஆயிரம் அடாவடிக் கட்சிப் பிரமுகர்களைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது. சுமார் 1,000 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கியது.

ஆனால், இதே காலகட்டத்தில் கடத்தல், கொலை, வன்முறை என்று மாவோயிஸ்ட்களின் எழுச்சி மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைத்தது. தொழிற்சாலைகளை அமைப்பதற்காக உழவர்களின் விளைநிலங்களை அரசே ஆர்ஜிதம் செய்ததை வைத்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே எழுந்த விரிசலை வைத்து மக்களின் உணர்வைத் தூண்டியது மம்தாவின் திரிணாமுல் கட்சி. 'அரசின் நில ஆர்ஜிதத்தால் இஸ்லாமியர்களே அதிகமாகப் பாதிக்கப் பட்டனர்’ என்று மம்தா செய்த பிரசாரம், இத்தனை ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் மீது இஸ்லாமியர்கள் வைத்து இருந்த நம்பிக்கையை அசைத்தது.

அதோடு, 'மா... மதி... மனுஷ்' என்று மம்தா எழுப்பும் உணர்வுபூர்வமான கோஷம் அடித்தட்டு மக்களை உலுக்கி எழ வைத்திருக்கிறது. 'தாய்... நிலம்... பொதுஜனம்' என்பதுதான் இதற்கு அர்த்தம். 'மிஸ்டர் முதல்வரே... வோட்டுக்களை காப்பாற்றிக்கொள்ள கொள்ள தோட்டாதான் உங்கள் ஆயுதமா?' என்று

திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் எழுப்பிய கோஷங்கள் மக்களிடம் எடுபட்ட விதத்தைப் பார்த்து, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா வெலவெலத்துப் போயிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 'ஆமாம். எங்கள் கட்சிக்காரர்கள் சிலர் எல்லை மீறிப் போய்விட்டார்கள். நாங்கள் தவறுதான் செய்துவிட்டோம். மன்னித்து எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்!’ என்று வன்முறைக்கு சப்பைகட்டு கட்டி புத்ததேவ் பட்டாசார்யா கையெடுத்துக் கும்பிட்டுவிட்டே தனது பிரசார உரையை ஆரம்பிக்க வேண்டிய நிலைமை!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மம்தா பானர்ஜியின் செல்வாக்கு கொல்கத்தா மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டுமே இருந்தது. ஊழல்வாதி, சுயநலவாதி என்றெல்லாம் குற்றம் சாட்ட முடியாத அளவுக்கு, காட்டன் புடவையோடும் ஜோல்னா பையோடும் மிக எளிமையாவே வாழ்க்கை நடத்தினாலும், 'கொள்கை இல்லாதவர்’, 'தெருச் சண்டை போடுகிறவர்’ என்று சொல்லி, மம்தாவை மார்க்சிஸ்ட் கட்சியினர் சிறுமைப்படுத்தினர். மம்தாவோ இந்த இமேஜை உடைத்துவிட்டு, இப்போது வெளியே தெம்பாக நிற்கிறார்.

இன்று பல கிராமங்களில் திரிணாமுல் கட்சியின் 'இரட்டை பூ’ கொடிதான் ஜிவ்வென்று பறக்கிறது. சிங்கூரில் இருந்து 'டாடா நானோ’ தொழிற்சாலை வெளியேறக் காரணமாக இருந்தவரே மம்தாதான் என்றாலும்... இப்போது அவர், 'விவசாயம் அடித்தளம் என்றாலும், தொழிற்சாலைகள்தான் மாநிலத்தின் எதிர்காலம்’ என்று முழங்கி தன் மீது நகர்ப்புறத்து இளைஞர்களையும் கவர் பண்ணியிருக்கிறார்.

அமெரிக்கத் தேர்தலின்போது ஒபாமா கையில் எடுத்த 'மாற்றம் வேண்டும்’ என்ற அதே மந்திர வார்த்தையை, தான் போகும் இடங்களில் மம்தா முழங்குவதைக் கேட்டு, 34 ஆண்டுகளாக மூச்சுத் திணறும் மேற்கு வங்க மக்கள், 'மாற்றத்துக்கு’ தயாராகிவிட்டார்கள் என்பதே நிஜம்!

முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியரை 'தாதா’ என்று குறிப்பிடும் வாக்காளர்கள் மம்தா பானர்ஜியை சகோதரி என்ற அர்த்தத்தில் 'தீதி’ என்று அன்போடு அழைப்பதில் இருந்தே... 'அடுத்த முதல்வர் யார்!’ என்பது தெளிவு!

- பி.ஆரோக்கியவேல்