Published:Updated:

சுஷ்மா சுவராஜ் விவகாரம்: ராகுல், சோனியா காந்திக்கு ஸ்ம்ரிதி இரானி பதிலடி!

Vikatan Correspondent
சுஷ்மா சுவராஜ் விவகாரம்: ராகுல், சோனியா காந்திக்கு ஸ்ம்ரிதி இரானி பதிலடி!
சுஷ்மா சுவராஜ் விவகாரம்: ராகுல், சோனியா காந்திக்கு ஸ்ம்ரிதி இரானி பதிலடி!
சுஷ்மா சுவராஜ் விவகாரம்: ராகுல், சோனியா காந்திக்கு ஸ்ம்ரிதி இரானி பதிலடி!

புதுடெல்லி: லலித் மோடியிடம் தனது குடும்பம், மகள், கணவர் பெற்ற பணம் எவ்வளவு என்பதை சுஷ்மா சுவராஜ், நாட்டுக்கு சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளதற்கு மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி பதிலடி கொடுத்து உள்ளார்.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சுஷ்மா சிறந்த நாடக கலைஞர் என்று சோனியா கூறியிருக்கிறார். அதன்மூலம் நாடாளுமன்றம் நாடக மேடை என்கிறாரா? அப்படியானால், நாடாளுமன்றத்தின் கவுரவத்தை பாதிக்கும் வகையில் அவர்கள் பேசுகின்றனர். குறிப்பாக மக்களவையின் மாண்பு பாதிக்கும் வகையில் ராகுல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சுஷ்மா, சுமித்ரா இருவருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஒரு சாதாரண குடும்பத்து பெண்கள் இந்த சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர கடினமாக பாடுபட வேண்டும் என்பது இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். கடின உழைப்பின் மூலம் முன்னேறும் பெண்களின் மகள்களும் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பதை பார்க்கிறோம்.

ஆனால், காங்கிரசில் காந்தி குடும்பத்தினர் மட்டும் விதிவிலக்கு. வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க அவர்கள் வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கவில்லை. அமைச்சர் சுஷ்மா மீது சோனியா, ராகுல் சொன்ன குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.

25 எம்.பி.க்களை அவைத்தலைவர் சுமித்ரா சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து, காங்கிரஸார் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தான் ராகுல் காந்தி விரும்புகிறாரா?" என்றார்.