Published:Updated:

அதிமுக-பாஜக இடையே திரைமறைவு கூட்டணி : ஈவிகேஎஸ் இளங்கோவன்

Vikatan Correspondent
அதிமுக-பாஜக இடையே திரைமறைவு கூட்டணி : ஈவிகேஎஸ் இளங்கோவன்
அதிமுக-பாஜக இடையே திரைமறைவு கூட்டணி : ஈவிகேஎஸ் இளங்கோவன்
அதிமுக-பாஜக இடையே திரைமறைவு கூட்டணி : ஈவிகேஎஸ் இளங்கோவன்

திருச்சி: அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேயான திரைமறைவு  கூட்டணி வெளிச்சத்திற்கு வந்து விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நடக்கும் முன்னாள் மாணவர் சங்க விழாவில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்தார் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவுக்கும் பாஜக வுக்கும் உள்ள திரைமறைவு உறவு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மோடி -ஜெயலலிதா சந்திப்பு தமிழகத்திற்கு நலன் தரும் சந்திப்பு இல்லை. இது அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கான சந்திப்பு கிடையாது; முழுக்க முழுக்க வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தானது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “காந்தியவாதி சசிபெருமாள் இறப்பிற்கு உடல்நலத்தை காரணம் காட்டி இரங்கல் கூட தெரிவிக்காத ஜெயலலிதா, மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வரவேற்பு கொடுத்தபோது உடல்நிலை என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் மோடியும் பூரண மதுவிலகிற்காக உயிர் நீத்த சசி பெருமாளுக்கு அனுதாபம் தெரிவிக்காதது தமிழக மக்களை ஏமாற்றம் அடைய செய்கிறது என்றார் இளங்கோவன்.

அதிமுக-பாஜக இடையே திரைமறைவு கூட்டணி : ஈவிகேஎஸ் இளங்கோவன்

"வெளிநாட்டு பயணங்களில் 10 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு ஆடைகளை உடுத்தும் மோடி நேற்று கைத்தறி தின விழாவில் பேசியபோது, நடிகர்கள் திரைப்படங்களில் கைத்தறி ஆடைகள் அணிய அறிவுரை கூறுவது எந்த வகையில் நியாயம்” என்ற இளங்கோவன், கைத்தறி ஆடைகள் மேல் மதிப்புள்ள மோடி, இனி வெளிநாடு பயணங்கள் செல்லும் பொழுது கைத்தறி ஆடைகளை உடுத்தி சென்றால் வெளிநாடுகளிலும் கைத்தறி ஆடைகளுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமையும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக-பாஜக இடையே திரைமறைவு கூட்டணி : ஈவிகேஎஸ் இளங்கோவன்

டாஸ்மாக்கை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக கூறுவது அரசியல் கட்சிகளை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. அனைத்து எதிர்கட்சிகளும் பொதுமக்களும் ஒருமித்த கருத்தோடு பூரண மதுவிலக்கை கொண்டுவர பாடுபடுவோம் என இளங்கோவன் மேலும் கூறினார். 

- சி.ஆனந்தகுமார்

படங்கள்;
தே.தீட்ஷித்