Published:Updated:

'மோடிக்கு வர முடியுது..கலாமுக்கு முடியாதா? '- ஜெயலலிதாவை விளாசும் வைகோ!

'மோடிக்கு வர முடியுது..கலாமுக்கு முடியாதா? '-  ஜெயலலிதாவை விளாசும் வைகோ!
'மோடிக்கு வர முடியுது..கலாமுக்கு முடியாதா? '- ஜெயலலிதாவை விளாசும் வைகோ!

'மோடிக்கு வர முடியுது..கலாமுக்கு முடியாதா? '- ஜெயலலிதாவை விளாசும் வைகோ!

ஈரோடு: மோடிக்காக விமான நிலையத்தில் காத்திருந்து அழைத்துவர முடிகிற ஜெயலலிதாவால், உலகமெல்லாம் போற்றக்கூடிய மாமனிதர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கிற்கு  வராதது தமிழ்நாட்டிற்கே அவமானம் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.

ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் இருக்கும் குருசாமிகவுண்டர் திருமண மண்டபத்தில் இன்றும், நாளையும் 'திராவிட இயக்க கருத்துப்பட்ட்றை' நிகழ்ச்சி ம.தி.மு.க சார்பில் நடக்கிறது.

இதை துவக்கி வைக்க வந்த வை.கோ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " தமிழகம் மதுவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கிறது. விளிம்பு நிலையில் இன்று தமிழகம் நிற்கிறது. இதிலிருந்து மீட்காவிடில் ஆயிரக்காணக்கான ஆண்டுகளாக இருந்த அனைத்தையும் இழக்கும். அதனால் தான் மறுமலர்ச்சி என்பது அழிவிலிருந்து மீட்பு. 

'மோடிக்கு வர முடியுது..கலாமுக்கு முடியாதா? '-  ஜெயலலிதாவை விளாசும் வைகோ!மதுவை ஒழிக்க நினைத்த சசிபெருமாளை கொன்றுவிட்டார்கள். நான்மட்டும் அவர் இறந்தார் என செய்தி கேட்டு ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்லாவிடில் அவரின் ரத்தம் தோய்ந்த சட்டையை மாற்றி கழுவி, போஸ்ட்மார்ட்டம் செய்து பாடியை சேலத்திற்க்கு பொட்டலம் கட்டியிருப்பார்கள். இதுதான் ஜெயலலிதா சர்க்கார் போட்ட திட்டம். அதை நான் முறியடித்தேன். கூன்டேற்றி இரண்டுபேரின் பதவியை பறிப்பேன் என கலெக்டர், எஸ்.பிக்கு எச்சரிக்கை கொடுத்தேன், போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என ஆயிரம் பேரை திரட்டினேன். எனவே ஜெயலலிதா வரும் பதினைந்தாம் தேதி, பார்களை மூடுகிறேன். பள்ளிக்கூடம் சர்ச் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுகிறேன், அங்கு விற்பனை நேரத்தை மூடுகிறேன் என மூன்று அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்.

இத்தனை நாட்கள் இந்த இடத்தில் மதுக்கடைகள் இருந்தது ஜெயலலிதாவிற்கு தெரியாதா. இத்தனை நாட்கள் என்ன செய்தார்கள்,. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க இலவசங்கள். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க ஊழல் பணம். நாலுமணி நேரம் மதுக்கடைகளை திறக்காவிடில் அ.தி.மு.க காரனை கொள்ளையடிக்க வழி பண்றீங்க.  குடிக்கிறவன் கடையில சரக்கு இல்லையினா எங்கடா கிடைக்கும்னா செயலாளர் வீட்டுல கிடைக்கும்பான், ஜெ பேரவை செயலாளர் வீட்ல கிடைக்கும்பான். கூட முன்னூறு ரூபாய் குடுத்து வாங்குவான். குடிக்கனும் நெனைச்சா அஞ்சி கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் போய் குடிச்சிட்டு வந்துருவான், அதனால் இந்த பித்தலாட்ட அறிவிப்பெல்லாம் வேண்டாம். எனக்குத்தான் பக்கத்துலேயே ஆட்கள் இருக்காங்களே. இப்ப யார் யாரை சந்தேகப்படப்போறாங்களோ தெரியல.

முதலமைச்சர் அவர்களே நீங்க நல்ல சுகமாயிட்டியன்னு எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க பழைய மிடுக்கோடு வர்றத பார்த்து நான் ரொம்ப சந்தோஷ்ப்படுறேன், நான் இன்னைக்கு வரைக்கும் உங்க உடல்நிலையை பற்றி கருத்து சொல்லியிருக்கேனா. முதல்வரோட உடல்நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என கருத்து கூட சொல்லல. நான் மனிதாபிமானி. ஆனால் நேத்து பார்த்தப்ப நீங்க ஆரோக்கியமா இருக்குறத பார்த்து சந்தோஷம், அதனாலதான ஏர்போர்ட் போய் அரைமணி நேரம் காத்திருந்து நரேந்திரம்மோடியை வரவேற்றாங்க. அதுக்குப்பிறகு வாசல்ல நின்னு பூங்கொத்து குடுத்து, குழலூதும் கண்ணன் சிலையை கொடுத்து, பதினைந்து நிமிடம் பேசி அதுக்குப்பிறகு நீங்களே ஓடியாடி பரிமாறியிருக்கீங்க. அப்ப ஏர்ப்போர்ட் போய் காத்திருந்து அழைத்து வரும் அளவிற்கு உடம்பு நல்லாயிருச்சி. அப்ப இவ்வளவு நாள் சொன்னது ஒரு அனுதாபத்தை திரட்ட, அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பத்திரிக்கு சிங்கப்பூர் போறாக, அமெரிக்கா போறாகன்னு திட்டமிட்டு பரப்பி விட்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன் ஏர்ப்போர்ட்டில் காத்திருந்து அழைத்துவர முடிகிற உங்களால், பிரதமருக்கு ஓடியாடி பரிமாற கால்களில் தெம்பிருக்கிற உங்களால் உலகமெல்லாம் போற்றக்கூடிய மாமனிதர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கிற்கு வரமுடியல.

உடல்நலக்குறைவுன்னு சொன்னீங்களே. அதே ஏர்போர்ட் வந்து மதுரைக்கு விமானத்தில வந்து மதுரையிலையாவது அவர் உடலுக்கு ஒரு மாலை வச்சீங்களா. இது தமிழ்நாட்டுக்கே அவமானம். ஆறு முதலமைச்சர்கள் வந்தாங்க. பிரதமர் வந்தாரு. நீங்க ஏன் வரவில்லை. உடல்நிலை சரியில்லை என்று சொன்னது பச்சைப்பொய். இதற்கு பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன், அதுமட்டுமல்ல நேற்றைக்கு மேகதாதுவுல எங்க அனுமதி இல்லாம அணை கட்டக்கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க. இதை எந்த அதிகாரி ட்ராப்ட் போட்டுக்கொடுத்தான். மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்று தானே சொல்லியிருக்க வேண்டும். அப்படியானால் அணை கட்ட அனுமதி வழங்க வழியிருக்கிறதா. இலங்கை தமிழர்களை பற்றி பேசியதாக சொல்கிறார்கள். அரசியல் பற்றிய பேச்சுக்கள் எனக்கு தேவையில்ல. ஆனால் இலங்கை தமிழர்களை பற்றி என்ன பேசினீர்கள் என்பதை வெளியில் சொல்ல வேண்டும்" என காட்டமாக கூறினேன்.

அதனைத் தொடர்ந்து கருத்துப்பட்டறை நிகழ்ச்சியை வைகோ துவக்கி வைத்தார்.

வீ.மாணிக்கவாசகம்

படங்கள்:  ரமேஷ் கந்தசாமி

அடுத்த கட்டுரைக்கு