Published:Updated:

தமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்!

Vikatan Correspondent
 தமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்!
தமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்!
 தமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்!

ஈரோடு: தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், இதுவரை தொகுதியில் உள்ள தன் சட்டமன்ற அலுவலகத்திற்கு ஒரு முறைகூட வந்ததில்லை என புகார் எழுந்துள்ளது தொகுதிவாசி களிடமிருந்து.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.

தன் தொகுதியான பெருந்துறையில் உள்ள சட்டமன்ற அலுவலகத் திற்கு, அவர் இதுவரை ஒரு முறை கூட வரவில்லை என புகார் வாசிக்கின்றனர் அத்தொகுதிமக்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிலர், " வாரத்துக்கு ஒருமுறைதான் இந்த ஊருபக்கம் எட்டிப்பார்ப்பாரு  அமைச்சர். அப்பவும்கூட எதனாவது ஃபங்க்ஷன் அப்படி இப்படின்னு போய்டுவாரு. மத்த நேரத்துல கட்சி ஆபீஸ்லயே உக்காந்துக்குவார். கட்சி ஆபீஸ்லேயோ, விழா நடக்கிற இடத்திலேயோ மனு கொடுத்து பேச முடியாது என்பதால் சட்டமன்ற அலுவலகம் வந்தா பார்க்கலாம்னா மனுஷன் இதுவரைக்கும் இந்தப்பக்கமே தலைவெச்சி படுக்கலை.

இவரோட பதவிக்காலமும் முடியப்போகுது. இதுவரைக்கும் இந்த ஆபீஸ் பக்கம் எட்டி பார்த்ததில்லீங்க.

 தமிழக அமைச்சரை கலாய்க்கும் தொகுதிவாசிகள்!

பொதுமக்களை சந்திக்கனும்னு நினைச்சாதானே இங்க வர்றதுக்கு. கட்சிக்காரங்களை மட்டும் சந்திச்சா போதும்னு நெனைச்சிட்டாரு போல" என்றார்.

அவர் அருகிலிருந்த இன்னொருவர், “ஒருவேளை போன பீரியட் எம்.எல்.ஏ இன்னும் ஆபீஸ் சாவியை இவருகிட்ட குடுக்கலையோ என்னவோ” என்றார் அப்பாவியாக.

வரும் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள் மக்கள் !
                                      
- வீ.மாணிக்கவாசகம்
படங்கள்
: ரமேஷ் கந்தசாமி