Published:Updated:

தொழில்துறை சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முற்சிக்கிறது: வைகோ!

Vikatan Correspondent
 தொழில்துறை சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முற்சிக்கிறது: வைகோ!
தொழில்துறை சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முற்சிக்கிறது: வைகோ!

நெய்வேலி: தொழில் துறை சட்டங்களை  நீக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள்,  25 சதவிகித ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்.எல்.சி.நிரந்தர தொழிலாளர்கள். இந்நிலையில், இதற்கு முன் நடந்த ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வழிநடத்தியதாக கூறி தொ.மு.ச. தலைவர் திருமாவளவனை பணி நீக்கம் செய்தது என்.எல்.சி. நிர்வாகம்.

 தொழில்துறை சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முற்சிக்கிறது: வைகோ!

இதனால் கொதித்துப்போன ஒப்பந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தைக்  கண்டிக்கும் வகையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தனர். தொழிலாளர்கள் அனைவரும் இணந்து இரண்டு தினங்களாகப்  பட்டினிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. தலைவர் வைகோ ஆதரவளித்துள்ளார். தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர், "தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. மாநில அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தொழிலாளர்களின் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதற்காக தொ.மு.ச. தலைவர் திருமாவளவனை, நிர்வாகம்  பணி நீக்கம் செய்துள்ளது. அவரை மீண்டும் நிர்வாகம் பணியில் அமர்த்தவேண்டும்.

4800 கோடி பங்குகளை விற்பனைசெய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. தொழிலாளர் துறையில் உள்ள 44 சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது.  உடனடியாக அரசு தொழிலாளர்கள் பிரச்சனையில் தலையிடவில்லை என்றால் வரும் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம் நடைபெரும். அதைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டமும் நடைபெறும்" என்று எச்சரிக்கை விடுத்த்தார்.

-க.பூபாலன்
படங்கள்: எஸ்.தேவராஜன்