Published:Updated:

அரசியல் காரணங்களுக்காக ஆ.ராசா மீது வழக்கு: குற்றஞ்சாட்டும் கருணாநிதி!

அரசியல் காரணங்களுக்காக ஆ.ராசா மீது வழக்கு: குற்றஞ்சாட்டும் கருணாநிதி!
அரசியல் காரணங்களுக்காக ஆ.ராசா மீது வழக்கு: குற்றஞ்சாட்டும் கருணாநிதி!

அரசியல் காரணங்களுக்காக ஆ.ராசா மீது வழக்கு: குற்றஞ்சாட்டும் கருணாநிதி!

அரசியல் காரணங்களுக்காக ஆ.ராசா மீது வழக்கு: குற்றஞ்சாட்டும் கருணாநிதி!

சென்னை: அரசியல் காரணங்களுக்காக ஆ.ராசா மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா என்னிடம் கூறும்போது, 13-11-2013 அன்று சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் நீதிபதியின் முன்பாகவே ராசாவின் மீதோ, அவருடைய குடும்பத்தினர் மீதோ எந்தவிதமான சொத்துக்குவிப்பும் இல்லை என்று தெரிவித்திருப்பதாக சொன்னார். ஆனால் இந்த நிலையில் சென்னை சி.பி.ஐ. அதிகாரி, ராசா மீதும், மற்றும் அவர் குடும்பத்தினர், நண்பர்கள் மீதும் புதிய ஒரு வழக்கைத் தொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த தி.மு.க.வினர் மீது தொடர்ந்து அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ராசா மீது ஏற்கனவே வழக்கு தொடுத்து, அதன் மீதான விசாரணைகள் எல்லாம் முடிவுறும் கட்டத்தில், பொதுத்தேர்தல் வரவிருக்கின்ற நேரத்தில் வேண்டுமென்றே இப்படியெல்லாம் சோதனைகள் செய்வதாக செய்திகளை வரச்செய்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்றே நினைக்கத் தோன்றுகிறது.

வருகின்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அமைந்துள்ள 64,094 வாக்குச்சாவடிகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, தி.மு.க. 64,094 வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்து உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது. தி.மு.க. தொண்டர்கள் தத்தமது பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், ஆளும் அ.தி.மு.க. ஆட்சியின் கைப்பாவையாகச் செயல்படும் தமிழக தேர்தல் அதிகாரிகளின் துணையோடு, உயிரோடு இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோரை, இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட நடைபெற்ற முயற்சிகளை முறியடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, தேர்தல் விதிகளுக்கு புறம்பாக தமிழக தேர்தல் அதிகாரிகளும் ஆளும் அ.தி.மு.க.வினரும் செய்து வரும் குளறுபடிகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதியை நிலைநாட்டிட செய்யும் நடவடிக்கைகளையும் தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. தலைமைக் கழகத்திலிருந்து மாவட்டத்திற்கு ஒரு வழக்கறிஞர் வீதம், அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்தில், தி.மு.க. வழக்கறிஞர்களுடன், நிர்வாகிகளோடும் இணைந்து ஆளுங்கட்சியினர் துணையோடு அரசு அதிகாரிகள் செய்து வரும் தில்லுமுல்லுகளை ஆராய்ந்து, அதுகுறித்த அறிக்கைகளை தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

பல தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாக இருந்தாலும், இப்பொழுது நம் எதிரிகள் ஜனநாயக விரோதச்செயல்களில் ஈடுபட்டாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகின்ற இந்தச் சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொண்டு ஒற்றுமையோடும் முழு ஈடுபாட்டோடும் பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு