Published:Updated:

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு: விஜயகாந்த் நம்பிக்கை!

கும்மிடிப்பூண்டி: 2016ல் தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு: விஜயகாந்த் நம்பிக்கை!

மக்களுக்காக மக்கள் பணி என்ற நிகழ்ச்சியை தே.மு.தி.க. வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கும்மிடிப்பூண்டியில் நேற்று நடைபெற்றது.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு: விஜயகாந்த் நம்பிக்கை!

இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ''தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம் என்றுச் சொல்லி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் அம்மா தண்ணீர் பாட்டில் விற்பதற்காக, கும்மிடிப்பூண்டியில் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றனர்.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு: விஜயகாந்த் நம்பிக்கை!

கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. கல்வி, குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்த தர வேண்டிய அரசாங்கம் மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டுகிறது. மணல் கொள்ளையை எதிர்த்து இன்று மக்களே சாலையில் இறங்கி போராடுகின்றனர்" என்று குற்றஞ்சாட்டினார்.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு: விஜயகாந்த் நம்பிக்கை!

இதையடுத்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 100 மீன்பிடி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வழங்கி உரையாற்றும்போது, ''பூரண மதுவிலக்கு கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் முதலமைச்சர் மவுனம் காப்பாது நியாயமா?.

மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய அரசாங்கமே தண்ணீரை பாட்டில் அடைத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்வது சரியல்ல. வருகின்ற 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியமைக்கும். அப்போது, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்றார்.

இந்த விழா தொடங்கும் முன்பே கடும் மழை பெய்ததால் தே.மு.தி.க தொண்டர்கள் அனைவரும் சேர்களை குடையாக பிடித்து கொண்டு தங்களது தலைவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்க காத்திருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே தனது பேச்சை முடித்துக் கொண்ட விஜயகாந்த், நான் அதிகம் பேச வேண்டும் என்று தான் இங்கு வந்தேன். மழையால் சிறிது நேரம் மட்டுமே பேசிவிட்டு செல்கிறேன் என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு