Published:Updated:

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் திடீர் கைது!

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் திடீர் கைது!
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் திடீர் கைது!

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் திடீர் கைது!

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் திடீர் கைது!

புதுடெல்லி: டெல்லி கன்டோண்மன்ட் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங்கை போலீசார் கைது செய்து உள்ளனர்.

புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) ஊழியரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, விசாரணைக்காக சுரீந்தர் சிங்கை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் மற்றும் அவரது கார் ஓட்டுநர் பங்கஜ், உதவியாளர் பிரவீன் ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து, டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ''அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து, அவரைத் தாக்கியதாக துப்புரவு ஆய்வாளர் ஆர்.ஜே.மீனா அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி தொண்டர்கள், நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கைது நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் அஷூடோஷ் கூறும்போது, ''நாங்கள் எப்போதும் கூறுவதுபோல், ஏன் ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக கைது செய்கிறீர்கள்? ஏன் ஒரே சமயத்தில் அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்யக்கூடாது?” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு