Published:Updated:

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்கிறார் எச்.ராஜா!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்கிறார் எச்.ராஜா!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்கிறார் எச்.ராஜா!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்கிறார் எச்.ராஜா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்கிறார் எச்.ராஜா!

சிவகாசி: பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்திப்பை கிண்டல் செய்து பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி உள்ளார்.

இது தொடர்பாக எச்.ராஜா சிவகாசியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்திப்பை கிண்டல் செய்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எந்த நிபந்தனையும் இல்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர வேண்டும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும்

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் ஐ.ஐ.டி. சார்பில் நடந்த நுழைவுத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 451 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். மற்றவர்கள் தனியார் பள்ளியில் படித்தவர்கள்.

இதேபோல், மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்தவர்கள். கல்வி தற்போது வியாபாரமாகி வருகிறது. மருத்துவப் படிப்புக்கு 2,800 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் அரசுப்பள்ளியில் படித்த 100 பேருக்கு கூட இடமில்லை என்றால் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் எப்படி முன் வருவார்கள்.

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. அரசு மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பா.ஜ.க. கோரி வருகிறது. மதுவிலக்கு தொடர்பாக தி.மு.க. அளித்துள்ள வாக்குறுதியினை நம்ப முடியாது. அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் வராது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமையும்போது பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு