Published:Updated:

ரூ.5.5 கோடிக்கு சொகுசு பேருந்து வாங்கிய முதல்வர் யார் தெரியுமா?

ரூ.5.5 கோடிக்கு சொகுசு பேருந்து வாங்கிய முதல்வர் யார் தெரியுமா?
ரூ.5.5 கோடிக்கு சொகுசு பேருந்து வாங்கிய முதல்வர் யார் தெரியுமா?

ரூ.5.5 கோடிக்கு சொகுசு பேருந்து வாங்கிய முதல்வர் யார் தெரியுமா?

ஹைதராபாத்:  முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்புக்காக, நவீன வசதிகளுடன் கூடிய குண்டு துளைக்காத பேருந்து ஒன்றை, 5.5 கோடி ரூபாய் செலவில் ஆந்திரா அரசு வாங்கியிருப்பது அந்த மாநில மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

ரூ.5.5 கோடிக்கு சொகுசு பேருந்து வாங்கிய முதல்வர் யார் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில்,  சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்புக்கு நவீன வசதிகளுடன் கூடிய குண்டு துளைக்காத பேருந்து ஒன்றை, 5.5 கோடி ரூபாய்க்கு ஆந்திர அரசு வாங்கியிருப்பது அம்மாநில மக்களை ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.

எந்த சாலையிலும் செல்லக் கூடிய இந்த பேருந்தில் குளியல் அறை, கழிவறை, டைனிங் ஹால், மீட்டிங் ஹால் மற்றும் இன்டர்நெட், வை-பை, கம்ப்யூட்டர் வசதிகள் உள்ளது.

மாதம் ஒரு மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு வரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்காக, இத்தனை கோடி ரூபாய் செலவில் குண்டு துளைக்காத சொகுசு பேருந்தை மாநில அரசு போக்குவரத்து துறை வாங்கியிருக்கிறது. சண்டிகரில் உள்ள ஜே.சி.டி.சி. நிறுவனம் இந்த பேருந்தை வடிவமைத்து உள்ளது.

துப்பாக்கி சூட்டிலும், குண்டு வெடிப்பிலும் சேதம் அடையாத வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது. பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளை பேருந்துக்குள் இருக்கும் டி.வி. திரையில் பார்க்கும் வசதியும் உள்ளது. வெளியில் உள்ளவர்கள் பேசுவதை தெளிவாக கேட்கும் வகையில் ஸ்பீக்கரும் உள்ளது. பேருந்து டிரைவருக்கு சாலையின் பாதைகள் தெள்ளத்தெளிவாக தெரிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பேருந்தில் 9 பேர் பயணம் செய்யலாம். குக்கிராமங்களுக்கு செல்லும் சந்திரபாபு நாயுடு, இரவில் இந்த பேருந்திலேயே ஓய்வு எடுத்துக்கொள்வார் என தெரிகிறது.

தற்போது, விஜயவாடாவில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த பேருந்தை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டதோடு, பேருந்தின் உள் அலங்காரத்தில் சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு