Published:Updated:

`டேம் 999' திரைப்படம் வெளியிடுவதை தவிர்த்திட வேண்டும்: கருணாநிதி

சென்னை: மத்திய-மாநில அரசுகள் விளைவுகளை சிந்தித்துப்பார்த்து `டேம் 999' திரைப்படம் வெளியிடுவதை தவிர்த்திட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையில் பல்வேறு கருத்து மாறுபாடுகளை ஏற்படுத்தி, உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒருசிலர் திட்டமிட்டு, `டேம் 999' என்ற பெயரிலேயே ஆங்கிலத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்திடச் செய்து 25-ந் தேதி முதல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தமிழகத்திலும் இப்படம் திரையிடப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கான தலைப்பையே கூட உள்நோக்கத்தோடு வைத்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணை உடைந்து நொறுங்குவதைப்போலவும், அதன் காரணமாக வெள்ளம் பெருகி பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு மடிவதைப் போலவும், அந்த திரைப்படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த திரைப்படம் இனி வெளிவரவுள்ள அனைத்து மலையாள சினிமாக்களுடன் இணைத்துத் திரையிடப்பட போவதாகவும் செய்தி வந்துள்ளது. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை இன்றையதினம் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் சார்பில் இந்த படத்துக்கு இதுவரை எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்தப்படம் வெளிவருமேயானால் தமிழர்களும், மலையாளச் சகோதரர்களும் இரண்டு மாநிலங்களிலும் ஒன்றுபட்டு இணக்கமாக வாழ்ந்து வருகிற நிலை மாறி, எப்படிப்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் என்பதை எண்ணிப்பார்த்து, இத்திரைப்படம் வெளியிடப்படுவதைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டியது அவசியமாகிறது. மத்திய-மாநில அரசினரும், திரைப்படத்துறையினரும் விளைவுகளை சிந்தித்துப்பார்த்து தக்கதொரு முடிவெடுத்து நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.