சோதனை மேல் சோதனை என்பார்களே, அது தமிழக மீனவர்களுக்குத்தான்! கடலுக்குள் போனால்

சிங்களவன் அடித்தே கொல்கிறான் என்றால், இப்போது கடலுக்குள் செல்லவும் மத்திய அரசு தடை விதித்து இருக்கிறது.

அதாவது மீன்களின் இனப் பெருக்கக் காலத்தை முன்னிட்டு விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் மீன் பிடிக்க 45 நாட்களுக்குத் தடை. இது கடல்வாழ் உயிர்களுக்கு நன்மை பயக்கும் விஷயம்தான். ஆனால் இந்த 45 நாட்களும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் மீன் விற்பவர்கள் சந்திக்கப் போகும் சவால்கள் ஏராளம். இனப் பெருக்கக் காலம், புயல், மழைக் காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம் ஆகிய நாட்களை தவிர்த்து ஆண்டுக்கு 150 நாட்கள் மட்டும் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் மீனவர்கள்.

அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மீன் பிடித் தடைக் காலத்தில்தான் பள்ளிக் கட்டணத்தில் ஆரம்பித்து பல்வேறு செலவுகளும் அந்தப் பாமர மக்களின் கழுத்தை நெரிக்கும். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டு போகும் நிலையில், திடீரென ஒட்டுமொத்தமாக வருமான இழப்பு என்றால்... எப்படி அவர்களால் சமாளிக்க முடியும்?

எனவே, மீனவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தாமல், வருமான இழப்புக்கு வழிவகை செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அனைத்து மீனவர்களுக்கும் குறைந்தது

5,000 கொடுத்து ஆறுதல் கரம் நீட்ட வேண்டும். நம் கடல் எல்லையைக் காசு வாங்காமல் காக்கும் அந்தக் காவல் தெய்வங்களின் மீது அரசின் கருணைப் பார்வை உடனடியாகத் திரும்பட்டும்!

- எஸ்.ஜான், தூத்துக்குடி-2