கதிர்வேல், திருநெல்வேலி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்பும் சிலர் இருக்கிறார்களே?

நேதாஜியின் மரணம் எப்போது, எங்கே, எப்படி நடந்தது என்பதுதான் சந்தேகத்துக்கு உரியதே தவிர, இன்னும் நேதாஜி எப்படி இருக்க முடியும்?

1945-ம் ஆண்டு மே மாத இறுதியில் விமான விபத்தில் நேதாஜி இறந்துபோன தகவலை நம்ப மறுப்பவர்கள் அதிகம். 'போஸ் உயிருடன் இருக்கிறார். எங்கோ மறைந்து இருக்கிறார் என்று என்னுடைய அந்தராத்மா சொல்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. நேதாஜியும் காந்தியும் எதிரும் புதிருமான கொள்கையைக்கொண்டவர்கள், ஆனாலும் நேதாஜியின் மரணத்தில் காந்தி சந்தேகப்பட்டார்.

இதுவரை வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் நேதாஜி, ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்று அங்கு மரணம் அடைந்தார் என்பதற்கே பல ஆதாரங்கள் உள்ளன. ரஷ்யப் பகுதியில் தலைமறைவாகத் திட்டமிட்டு, பறந்தார் நேதாஜி. அவர் விபத்தில் இறந்துவிட்டதாக ஜப்பான் அறிவித்துவிட்டது. அதனால்தான், '1945 ஆகஸ்ட் 18-ம் தேதி விபத்து நடந்ததாக’ ஆகஸ்ட் 23-ம் தேதி ஜப்பான் சொன்னது.

தனது தாய் கொடுத்த வட்ட வடிவக் கை கடிகாரத்தை அணிந்திருப்பாராம் நேதாஜி. ஆனால், கண்டு எடுக்கப்பட்டது சதுர வடிவக் கடிகாரம். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவது, 2 மணி 30 நிமிடம். ஆனால் அந்தக் கடிகாரம் 1 மணி 8 நிமிடத்தில் நிற்கிறது.

இப்படி எத்தனையோ சந்தேகங்கள் அவரது மரணத்தில் உண்டு. என்றாலும்... நம் நெஞ்சில் வாழ்கிறார் நேதாஜி!

மு.ரவிசங்கர், விராலிமலை

ஜெயலலிதா ஜெயித்துவிட்டால்... என்ன நினைப்பீர்?

நோகாமல் நொங்கு எடுத்துவிட்டாரே என்று! ஒரு பொறுப்பான எதிர்க் கட்சியாய் செய்ய வேண்டிய பணிகள் எதையும் அவர் செய்யவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவராய் காட்டியிருக்க வேண்டிய இங்கிதமும் அவரிடம் இல்லை. பிரசாரம் என்று பார்த்தாலும் சுணக்கமாய்,தேய்ந்து போன ரெக்கார்டாய் திரும்பத் திரும்பச் சொன்னதையே சொன்னார்.

ஜெயலலிதா மீதான பாசத்தைவிட, கலைஞர் மீதான கோபமே வாக்காளர்கள் மனங்களில் வெளிப்பட்டது. அதனால்... நோகாமல் நொங்கு!

ஆ.அரசப்பன், ஸ்ரீவைகுண்டம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரையும் நீக்கிக்கொண்டே இருக்கிறாரே தங்கபாலு?

சார், எப்போதும் 'ஒன் மேன் ஆர்மி!’

தன்னைத் தவிர யாருமே கட்சிக்குத் தேவை இல்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் தங்கபாலு!

எட்வர்ட் ஜெயபால், திங்கள்சந்தை

கருணாநிதியை, 'வாழும் பெரியாரே!’ என்று புகழ்கிறார்கள். பெரியாரின் வாரிசு யார்? கலைஞரா... வீரமணியா?

பெரியாரே, 'எனக்கு வாரிசு எவரும் இல்லை. என்னுடைய கொள்கைகளும் கருத்துகளும்தான் என் வாரிசுகள்’ என்று சொன்னார். வர்த்தக நிறுவனங்களைக் காப்பாற்றத்தான் வாரிசுகள் வேண்டும். கட்சிகளை வளர்க்க... கொள்கைகள் போதும்!

சுவாமிநாதன், சென்னை

கரன்ஸி விளையாடியதால்தான் வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகமானது என்கிறார்களே?

அது உண்மை என்றால், கொளத்தூரில் 100 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். பணத்தில் குளித்த கொளத்தூரில்தான் மிகக் குறைவாக 66 சதவிகிதம் பதிவாகி இருக்கிறது!

வீரமணிதாசன், கொளத்தூர்

'கூட்டணி ஆட்சி அமைக்கத் தயார்’ என்கிறார் கலைஞர். 'தனிப் பெரும்பான்மையே கிடைக்கும்’ என்கிறார் ஜெயலலிதா. எது நடக்கும்?

'இதில் எதுவோ ஒன்றுதான்’ என்பதை மே 13-ல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இருவருடைய எண்ணங்களையும் பாருங்கள்!

யாருடனாவது சேர்ந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்துவிடத் துடிக்கிறார் கருணாநிதி. இதுவரை ஒன்றாக இருந்தவர்களை உடனடியாக வெட்டிவிடத் துடிக்கிறார் ஜெயலலிதா. நல்ல அரசியலுக்கு இந்த இரண்டுமே ஆபத்தானவை!

லட்சுமி, மயிலாப்பூர்

தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு ஓட்டே இல்லையாமே?

முதலில் ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடியானது. இப்போது வாக்காளர் பட்டியலிலேயே பேர் இல்லையா? போகிற போக்கைப் பார்த்தால்... சீமான் கட்சிக்கு வேலை குறைந்துகொண்டே வருகிறது!

நமச்சிவாயம், புதுக்கோட்டை

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று பேசுபவர்கள் ஏன் ஃபெரோஸ் காந்தியைப் பற்றிப் பேசுவதே இல்லை?

சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டு வைத்தவர் இந்திராவின் கணவர், ராஜீவின் அப்பா, சோனியாவின் மாமனார், ராகுல், பிரியங்காவின் தாத்தாவான ஃபெரோஸ் காந்தி!

இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது பல நிதி மோசடிகள் நடந்தன. 'இது நிதித் துறை வசம் உள்ள வருமான வரித் துறைக்குத் தெரியாதா? தெரியாது என்று சொன்னால், நம்பும்படி இருக்கிறதா? ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காணாததுபோல் இருக்கிறது? யாரைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தன் நம்பகத்தன்மையை இழக்க வேண்டும்? எப்படியாவது மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுங்கள். கிட்டத்தட்ட

8 கோடி என்பது பொதுமக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணம்’ என்று நாடாளுமன்றத்தில் பரபரப்புக் கிளப்பியபோது... ஃபெரோஸ் காந்தி, காங்கிரஸ் உறுப்பினர்தான். முந்திரா ஊழலைக் கிளப்பி டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் காரணமாக இருந்தவரும் ஃபெரோஸ்தான்.

சுமார்

8 கோடி முறைகேடு, இன்று

1.76 லட்சம் கோடியாக ஆன பிறகு, ஃபெரோஸ் காந்தியைப்பற்றிப் பேச காங்கிரஸ்காரர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது!

மணியரசு, செங்கல்பட்டு

என் வீட்டு வரவேற்பறையில் எழுதிவைக்க ஒரு வாசகம் சொல்லுங்கள்?

மாவீரன் நெப்போலியனின் வாசகம் ஒன்று உண்டு... 'இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நல்லவர்களால்தான்!’

கந்தசாமி, சென்னை

தினமணி வெளியிட்டிருக்கும் தேர்தல் மலர் பார்த்தீரா?

அதில் ஒரு செய்தியைப் படித்தபோது ஏக்கமாக இருந்தது. முன்னாள் அமைச்சர் பூவராகனின் பேட்டி. அவர் எம்.எல்.ஏ-வாக 1962-ல் போட்டியிட்டபோது, விருத்தாசலத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு உறவினர்கள் வந்தார்களாம்.

'நீ படித்த படிப்புக்கு நல்ல உத்தியோகத்துக்குப் போய் கை நிறைய சம்பளம் வாங்கலாம். மாசம்

250 சம்பளம்கூட இல்லாத எம்.எல்.ஏ-வாகி வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளாதே’ என்று சொன்னார்களாம். 'நான் எம்.எல்.ஏ-வாவது சம்பாதிக்க அல்ல. சேவை செய்யத்தான்’ என்று பதில் அளித்தாராம் பூவராகன்.

எம்.எல்.ஏ. ஆகி வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளாதே என்று சொல்லும் காலம் இருந்து இருக்கிறது. ஆனால், இன்று மாநகராட்சி கவுன்சிலர்களே

250 கோடிகளைத் தாண்டிச் சேர்த்த தகவலும் கிடைத்திருக்கிறது. பூவராகன்கள்... அபூர்வராகன்கள்!

அபுதாஹீர், ஆம்பூர்

ஹிட்லரைப்பற்றி எதைப் படித்தாலும், அவரை விமர்சிப்பதாகவே இருக்கிறதே? அவரிடம் பின்பற்ற எதுவுமே இல்லையா?

ஏன் இல்லை? பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய இலக்கணம் ஒன்றை, தனது சாவுக்கு சில நிமிடங்களுக்கு முன் எழுதப்பட்ட உயிலில் ஹிட்லர் எழுதினார்.

'என்னுடயது என்று கருதப்படுகிற அனைத்தையும் கட்சிக்குச் சொந்தமாக்குகிறேன். கட்சி இயங்காத நிலை ஏற்படுமானால், அனைத்தும் அரசாங்கத்தைச் சேரும். அரசாங்கமும் செயல்படாத நிலை ஏற்பட்டால், நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!’

பொது வாழ்வுச் சம்பாத்தியங்கள் கட்சிக்கே சொந்தம் என்று சொன்னவர் ஹிட்லர். தமிழகத்தில் அதைச் செய்து காட்டியவர்... பெரியார்!