மார்ச் 8...
கனவு மெய்ப்படுமா?
சர்வதேச மகளிர் தினம் கொண் டாடத் துவங்கி நூறாவது ஆண்டு! வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நாளில், இந்திய மகளிர் வரலாற்றுத் திருப்புமுனையான பரிசுக்காக டெல்லி நோக்கிக் காத்திருக்க... குறுகிய மனம்கொண்ட சிலரால் அந்த நாள் கசப்புமிக்கதாக முடிந்தது.
1992-ம் வருடத்திலிருந்தே எட்டாத கனவாக நீண்டு கொண் டிருக்கும் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா, பெரும்பான்மை
ஆதரவோடு முதலில் மேல்சபையில் நிறைவேறும் என்று அனைவரும் காத்திருக்க... எதிர்பாராத அமளிகள்தான் அன்று அரங்கேறின!
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில் 33 சதவிகித இடங்கள் பெண்களுக்கே ஒதுக்கப்படும் வண்ணம் இந்த 108-வது சட்டத் திருத்த மசோதா வகுக்கப்பட்டிருந்தது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இதற்குத் தேவை!
எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி., இடதுசாரிகள் போன்றவற்றோடு, யு.பி.ஏ. மற்றும் என்.டி.ஏ. கட்சிகளும் ஆதரவு கொடுக்க முன்வந்தன. தி.மு.க., அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், தெலுகு தேசம், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையும் ஆதரவளித்தன.
ஆனால், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி, லாலு பிரசாதின் ஆர்.ஜே.டி., ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 8-ம் தேதி இந்த மசோதாவை அவைத் தலைவர் எடுத்துக் கொள்ளச் சொல்ல... சட்டென எழுந்திருக்க வேண்டிய அமைச்சர் வீரப்ப மொய்லி நேரம் தாழ்த்தினார். அந்த சிறுகண இடைவெளியில் மாநிலங்களவை வரலாற்றில் இல்லாத அமர்க்களங்கள் நடந்தேறத் தொடங்கிவிட்டன. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபரில் இதே சபையில் இந்த மசோதா அறிமுகப் படுத்தப்பட்ட சமயத்தைவிடவும் இப்போது மோசமான நிலைமை உருவானது!
முன்பு ஏற்பட்ட அமர்க்களத்தால்தான், இந்த மசோதா நடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கே அனுப்பப்பட்டது. நிலைக்குழு, 'இந்த மசோதாவில் எந்தவித மாற்றமும் தேவையில்லை. இதே நிலையில் இந்த மசோதாவை சட்டமாக்கலாம்' என்று கூறி அறிக்கை சமர்ப்பித்தது. இதை கடந்த மாதம் அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுதான், மாநிலங்களவை முன் வந்தது இந்த மசோதா. இதை எதிர்க்கும் முலாயம் சிங், லாலு மற்றும் பி.எஸ்.பி. தலைவி மாயாவதி போன்றவர்கள், இந்தப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் போன்ற பெண்களுக்கென்று உள்ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். அதை சேர்த்தே தாக்கல் செய்தால்தான் மசோதாவை நிறைவேற விடுவோம் என்கிறார்கள்.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் சமாஜ்வாடி மற்றும் லாலுவின் ஆர்.ஜே.டி. உறுப்பினர்கள் இந்த மசோதாவை கிழித்துப் போட்டதோடு, மாநிலங்களவையின் தலைவரும் உதவி ஜனாதிபதியுமான அன்சாரியின் இருக்கையையும் சூறையாடினார்கள். ''மெஜாரிட்டி பலத்தை வைத்திருந்தும் காங்கிரஸ் 'திட்டமிட்டு' குளறுபடியை ஏற்படுத்திவிட்டது. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால், கண்டிப்பாக இந்த மசோதாவை சுலபமாக நிறைவேற்றி இருக்க முடியும்!'' என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ, ''அரசியல் சாசனத் திருத்த மசோதா நிறைவேற்ற முயலும்போது நாகரிகமாகவும் பக்குவமாகவும்தான் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் அமளி செய்பவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றவோ... சஸ்பெண்ட் செய்யவோ முடியாது. அப்படிச் செய்தால் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் சிக்கலாகி, மசோதா சட்டமாவது மேலும் தாமதமாகிவிடும்...'' என்று காரணம் சொல்கிறார்கள்.
மத்திய அரசுக்கு இதுவரை அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக முலாயமும் லாலும் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டாலும் மெஜாரிட்டிக்கு குந்தகம் இல்லை என்றாலும்... காங்கிரஸ் அரசு இந்த கால் வாரலை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை!
''எப்படியும் இந்தமுறை மசோதாவை நிறைவேற்றியே தீருவோம். ஆனால், பெண்பாவம் பொல்லாதது! இந்த விஷயத்தில் தேசத்தை அடுத்ததொரு புரட்சிகரமான பரிமாணத்துக்குச் செல்லவிடாமல் தடுக்கப் பார்த்தவர்கள் மீது வரலாறு நிரந்தரக் கறையைப் பூசுவது நிச்சயம்!'' என்று கொந்தளிக் கிறார்கள் காங்கிரஸின் பெண் பிரமுகர்கள்!
- சரோஜ் கண்பத்