Published:Updated:

நானும், மோடியும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்தான்: ராஜ்நாத் சிங்

புனே: "நானும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்" என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

நானும், மோடியும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்தான்: ராஜ்நாத் சிங்

 புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ''நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டன்தான். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்தான் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நடத்தி வருகிறது என எதிர்க்கட்சியினர் கூறி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோல் பொது இடத்திலும், தனியாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நாங்கள் சந்திப்பதன் காரணமாக, பதவி ஏற்கும்போது ஏற்றுக்கொள்ளும் ரகசிய காப்புறுதி பிரமாணத்தை நாங்கள் மீறிவிட்டதாக கூறுவதும் தவறு. எந்த பிரமாணத்தையும் நாங்கள் மீறவில்லை'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!