Published:Updated:

முல்லைப் பெரியாறு: கேரள எம்.பி.க்கள் தர்ணா

முல்லைப் பெரியாறு: கேரள எம்.பி.க்கள் தர்ணா
முல்லைப் பெரியாறு: கேரள எம்.பி.க்கள் தர்ணா
முல்லைப் பெரியாறு: கேரள எம்.பி.க்கள் தர்ணா

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தலையிட வலியுறுத்தி, கேரள எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூடினர்.

அப்போது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோஷமிட்டனர்.

'தமிழ்நாட்டுக்கு தண்ணீர்; கேரளாவுக்கு பாதுகாப்பு' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தட்டிகளை அவர்கள் கையிலேந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.

முன்னதாக, கேரள காங்கிரஸ் எம்.பி. ஜோஸ் கே.மணி, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று தாம் நோட்டீஸ் வழங்கியதாக தெரிவித்தார்.

கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் மக்களின் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இருப்பதால், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேரள எம்.பி.க்கள் கோரினர்.