தி.மு.க.-வுக்கு திருமா திடீர் கோரிக்கை

''அய்யா மகன் அன்புமணிக்கு ஒரு ஸீட் தாருங்கள்!''

ஈழம் இடுகாடாகி ஒரு வருடமாகிவிட்டது. அதன் நினைவாக தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர்வுக் குரல்கள் கிளம்பியதே தவிர, உருப்படியாய் எந்த சங்கநாதமும் முழங்கவில்லை. ''திருமாவளவன் போன்றவர்கள் தி.மு.க. பக்கம் சாய்ந்ததால்தான் இத்தகைய சிதறல்!'' என ஈழ ஆதரவாளர்கள் பலரும் இதற்குக் காரணம் சொல்கிறார்கள். இந்நிலையில், திருமாவளவனைச் சந்தித்தோம்.

''தன்மான தமிழ்ப்புலி... தமிழீழக் கொள்கைப்புலி... ஈழத் தமிழருக்காய் உயிர்கொடுத்த தமிழ்நாட்டுக் கரும்புலி!'' - சங்கர் கணேஷ் இசையில் வெளியான முத்துக்குமார் நினைவுப் பாடலை உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்த திருமாவளவன் நமக்காக நேரம் ஒதுக்கினார்.

? ''ஈழ ஆதரவு கோஷம் நமநமத்துப் போனதுக்கு காரணமே நீங்கள் தி.மு.க. கூட்டணியில் கலந்ததுதான் என்கிறார்களே?''

''இது ஏற்கவே முடியாத அவதூறு. ஈழப் போர் உக்கிரம் அடைந்த

காலகட்டத்திலே, தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே ஈழ ஆதரவுப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியவர்கள் நாங்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே நெடுமாறன், ராமதாஸ், வைகோ உள்ளிட்ட ஈழ ஆதரவு தலைவர்களுடன் கலந்து எதிரணியில் பயணம் செய்தது எல்லோருக்குமே தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் 'ஈழ விடுதலை அரசியல் முன்னணி' என்கிற பெயரில் தனி அணி கட்டி, அதற்கு டாக்டர் ராமதாஸை தலைமை ஏற்க அழைத்தவன் நான். நெடுமாறன், வைகோ என யார் தலைமையில் தனி அணி அமைந்தாலும், அவர்களின் கீழே அணி வகுத்து நிற்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், யாருக்காவது தனி அணி உருவாக்க தைரியம் வந்ததா? அத்தனைப் பேரும், ஜெய லலிதாவுக்குதானே முட்டுக்கொடுக்க ஓடினார்கள்? தேர்தல் வரை தனி ஈழம் குறித்து பேசிய ஜெயலலிதா, தேர்தலுக்குப் பிறகு ஈழம் என்கிற ஒரு வார்த்தையைக்கூட உதிர்க்கவில்லை. அவருடைய உள்ளார்ந்த ஈழப் பாசம் இவ்வளவுதான் என்பது ஏன் அவர் பின்னால் அணி வகுத்த தலைவர்களுக்குப் புரியாமல் போனது? யாரும் மறுக்க முடியாத உண்மையைச் சொல்கிறேன்... நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால் காங்கிரஸோடு கைகுலுக்க அடுத்த கணமே அம்மையார் தயாராகி இருப்பார்.''

?''ஈழ ஆதரவு ஒருங்கிணைப்பைச் சிதற டிக்கும் கருவியாகவே தேர்தலின்போதும், இப்போதும் தி.மு.க. உங்களைப் பயன் படுத்துவதாகச் சொல்லப்படுகிறதே?''

''தேர்தலின்போது, 'சிறுத்தைகள் வந்தாலும் சரி... வராவிட்டாலும் சரி' என்கிற மனநிலையில்தான் தி.மு.க. இருந்தது. தனி அணிக்கு தொடர்ந்து வலியுறுத்திய

நான், அதற்கு சாத்தியம் இல்லாத சூழலில்தான் ஜெயலலிதாவுக்கு முட்டுக்கொடுக்க விரும்பாமல் தி.மு.க. கூட்டணியைத் தொடர்ந்தேன். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து கொண்டு நாங்கள் தொடர்ந்து ஈழ விடிவுக்காகக் குரல் கொடுப்பது தி.மு.க-வுக்கு தலைவலியாகத்தான்அமையுமே தவிர, ஆதாயமாக அமையாது. தங்களின் தவறு களை மறைப்பதற்காகவே எங்களை பலிகடாவாகச் சிலர் தவறாகச் சித்திரிக் கிறார்கள். ஈழ விவகாரத்தில் நாங்கள் எந்த அளவுக்கு பிடிப்போடு இருக்கிறோம் என்பது நிஜமான தமிழர்களுக்கும் புலிப் பிள்ளைகளுக்கும் புரியும்!''

?''இருந்தாலும், எம்.பி-க்கள்குழு தொடங்கி ஈழம் குறித்த விஷயங் களில் தி.மு.க. உங்களை பகடையாகப் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து சொல்லப் படுகிறதே?''

''என்னை இன்றைக்கு துரோகியாகச் சித்திரிப்பவர்கள் ஈழப் போரை நிறுத்தக் கோரி நான் உண்ணாவிரதம் இருந்தபோது எங்கே போனார்கள்? பரபரப்பு ஏற்படுத்தவோ... பாலிடிக்ஸ் பண்ணவோ நான் உண்ணாவிரதம் இருக்க வில்லை. தேர்தல் நெருங்கிய அந்த வேளையில் என் உண்ணாவிரத மேடைக்கு ஜெயலலிதா வந்திருந்தால், தமிழகத்தின் அரசியல் நிலவரமே தலைகீழாக மாறி இருக்குமே! அவர்தான் வரவில்லை... அவர் கூட்டணியில் இருந்த வைகோ வந்திருந்தாலே அன்றைய நிலைமைக்கு தமிழக மக்களின் உணர்வுகள் ஒருமித்து எழுந்திருக்குமே? என் உடல் நலனுக்காக உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளச் சொன்ன மருத்துவர் ராமதாஸ், அப்படிச் செய்யாமல் என் உண்ணாவிரதத்துக்கு தானே முன்னின்று ஆதரவுகொடுத்து... என்னைச் சாகவிட்டு ஈழப் போரை நிறுத்தப் போராடி இருக்கலாமே... உயிரை உதறி வீசும் உண்மையான உணர் வோடுதான் நான் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருந்தேன். திலீபன் மரணிக்கப் போவது தெரிந்தும் அவன் சாவின் மூலம் ஒன்றுபட்ட உணர்வை எழுப்பலாம் என பிரபாகரன் எண்ணியதைப்போல, ராமதாஸோ வைகோவோ இல்லை நெடுமாறன் அய்யாவோ எண்ணி இருக்கலாமே... யாருக்கும் அந்தத் துணிவு வரவில்லையே... என் உண்ணாவிரதத்தைதொடரச் சொல்லி யாருமே வற்புறுத்த வில்லையே... தி.மு.க. அணிக்கு தேர்தல் களத்தில் பலம் சேர்ந்துவிடக் கூடாது என்று தான் பலரும் துடித்தார்களே தவிர, ஈழத்தை வாழ வைக்க அல்லவே..! ஈழ விவகாரத்தில் என் மீது இனியும் யாராவது சந்தேகம் கிளப்பினால்... அதற்கு என் பதில், 'இப்போதும் தாமதமில்லை... ஈழத்துக்கான அணியை இன்றே உருவாக்க வாருங்கள். தி.மு.க. கூட்டணியை உதறிவிட்டு வெளியே வர நான் தயார்!' போதுமா?''

?''தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவதை வரவேற்கிறீர்களா?''

''நாடாளுமன்றத் தேர்தலின் போதே பா.ம.க-வை தி.மு.க. கூட்டணிக்கு அழைத்தேன். என் வார்த்தையை அவர்கள் கேட்டிருந்தால், போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் கண்டிப்பாக வெற்றி கிடைத்திருக்கும். நாடாளுமன்றத்தில் ஈழக் கோரங்களைப் புட்டுப்புட்டு வைக்க வலுவான கூட்டு சக்தி கிடைத்திருக்கும். இப்போதும், பா.ம.க-வை மனமார அழைக்கிறேன். அதன் வரவை தி.மு.க. ஏற்கவேண்டும் என்பதையும் என் கோரிக்கையாக வைக்கிறேன்! மருத்துவர் அய்யா மகன் அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா ஸீட் கொடுக்க வேண்டும் என்றும் தி.மு.க.வை கேட்டுக் கொள்கிறேன்''

?''தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் துரோகங்களைப் பட்டியல் போட்டு சீமான் தனி இயக்கம் தொடங்கி இருக்கிறாரே?''

''மனமார வரவேற்கிறேன். கூட்டணி கிடையாது எனச் சொல்லிவிட்டு, இன்று கூட்டணித் தேடி அலையும் விஜய காந்த் போல் ஆகிவிடாமல், அவர் கடைசிவரை உறுதியான பிடிப்போடும் - மாற்று சக்தி திறனோடும் இருந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்!''

ஒப்புக்குக்கூட சிரிக்காமல் உதறிக் கிளம்புகிறது சிறுத்தை!

- இரா.சரவணன்
படம் எம்.உசேன்