Published:Updated:

பஞ்சத்தின் சாட்சி...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-8)

ற்றிய உடல் ஒட்டிய வயிறுமாக, தோல் போர்த்தப்பட்ட எலும்புக் கூடுகளோ என்று நினைக்குமளவிற்கு பெரியவர்கள், குழந்தைகள் என ஒருசேர காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் பஞ்சத்தின் சாட்சி. தன் தாயின் வற்றிபோன மார்பகங்களில் தனக்கான உணவைத் தேடிக் கொண்டிருக்கும் குழந்தை துயரத்தின் வலியை உணர்த்துகிறது. நூற்றாண்டுகள் கடந்தும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தப் புகைப்படம் ஆப்ரிக்காவிலோ, சோமாலியாவிலோ எடுக்கப்பட்டதல்ல. 1876-78ல் நம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய கொடும் பஞ்சத்தின் போது வில்லோபை வாலஸ் ஹூப்பர் (Willoughby Wallace Hooper ) என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது.

பஞ்சத்தின் சாட்சி...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-8)

1876-1878ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சென்னை மாகாணத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. மிக சரியாக இரண்டு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலில் தென்னிந்தியப் பகுதிகளான சென்னை, மைசூர், பம்பாய், ஹைதராபாத் போன்ற நகரங்களையும், இரண்டாம் ஆண்டில் கடைசியில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் பகுதிகளுக்கும் அடுத்தடுத்துப் பரவியது. சுமார் ஐந்து கோடியே 80 லட்சம் மக்கள் உணவு தானியங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டும், ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பட்டினியின் கொடுமையால் உயிரிழந்த உலகத்தின் மிகப்பெரிய பஞ்சம் இதுதான் என்கிறது வரலாற்றுத் தரவுகள்.

1876 மே 1-ல் எம்ப்ரஸ் ஆஃப் இந்தியா (Empress of India) என்ற பதவியை அரசி விக்டோரியா ஏற்ற அதே வருடம்தான் வறட்சியும் ஆரம்பித்தது. இந்தியா அரசி விக்டோரியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு ஏற்பட்ட மூன்று பஞ்சங்களில் இதுவே முதல் பஞ்சம். இந்த வறட்சிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியக் காரணம் பருவமழை பொய்த்துப் போனதுதான். அதுவரை சராசரியாக 27.6 இன்ச்  என வருடந்தோறும் பெய்து வந்த மழையின் அளவு 1876-ல் வெறும் 6.3 இன்ச்சாக குறைந்ததால் வறட்சி உச்சத்தைத் தொட்டது. இரண்டாவது, 1858-ல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு சென்னை மாகாணம், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் புகைவண்டிகள்(ரயில்கள்), தானிய வணிகம், பருத்தி பயிரிடல் ஏற்றுமதி என பலவற்றை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது. மேலும் உணவு தானியங்கள் பயிரிடுவதைக் குறைத்து அவர்களுக்குத் தேவையான பருத்திகளை அதிகளவில் பயிரிடவும் தொடங்கினர். மூன்றாவதாக, கடுமையான வறட்சியால் தானியங்களின் உற்பத்தி முற்றிலுமாக குறைந்துவிட்ட போதிலும் ஏற்றுமதிக்கு வசதியாக ரயில்வே போக்குவரத்து இருந்ததால் ஏற்றுமதியாளர்களும், பெரும் செல்வந்தர்களும் இந்தியாவில் விளைந்த சொற்ப தானியங்களையும் ஏற்றுமதி செய்ததை நிறுத்தாதது, என்பன போன்ற காரணங்களால் பஞ்சம் தன் கோர பற்களால் ஏழை மக்களை வேட்டையாடிக் குவிக்கத் தொடங்கியது.

கட்டுப்பாடற்ற தானிய ஏற்றுமதியினால் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உணவு தானியங்கள் என்பது கனவாக மாறிவிட்டது. ஏற்றுமதிக்காக அதிகாரவர்க்கத்தினர் தானியங்களை பதுக்கிவிட்டதால் இவர்களிடம் பணம் இருந்தும் வாங்க முடியாமல் போனதால் கலவரம் வெடிக்கத் தொடங்கியது. மேலும் பிரிட்டனின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக வெளிநாடுகளில் இருந்தும் பஞ்சத்தை தவிர்க்க தேவையான உணவு தானியங்களை எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லக்கூடிய தஞ்சாவூரே தடுமாறும் அளவிற்கு உனவுப் பஞ்சமும், வறட்சியும், பட்டினி சாவும் ஏற்பட்டது. நிவாரண உதவிகளை முடக்கிவிட வேண்டிய இந்தக் காலகட்டத்தில்தான் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக (governor of Madras) இருந்த ரிச்சர்ட் க்ரென்வில் (Richard Grenville) பொழுதுபோக்கு சுற்றுலாவிற்காக அந்தமான், நிக்கோபார், பர்மா என பயணித்துக் கொண்டிருந்தார். அவர் சிலோன் சென்றடையும்போதுதான் சென்னையில் உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்டக் கலவரம் பற்றியே அவருக்கு தெரிய வருகிறது. உடனே அவர் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ராபர்ட் பல்வர் லிட்டன் (Robert Bulwer-Lytton) தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அப்போது இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையராக இருந்த ரிச்சார்ட் டெம்பிள்  "டெம்பிள் வேஜ்’’ (Temple wage) என்ற புதிய ஊதியக் கொள்கையை உருவாக்குகிறார். இதன்படி பிரிட்டிஷ் அரசின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மட்டும் 450 கிராம் பருப்பும் ஒரு அனா காசும்

பஞ்சத்தின் சாட்சி...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-8)

வழங்கப்பட்டது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் இதைவிடக் குறைவான அளவே வழங்கப்பட்டது. அதேசமயம் நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்கவும் செய்தனர். சென்னை நகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயும் இவ்வாறுதான் கட்டப்பட்டது. இந்த நிவாரணம் போதாது என்று கூறி போராட்டம் வலுத்ததன் விளைவாக 1877-ல் பருப்பின் அளவு 570 கிராமாக உயர்த்தப்பட்டாலும் பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை மலேரியா தாக்கியதில் மேலும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

இந்தப் புகைப்படத்தை எடுத்த வில்லோபை வாலஸ் ஹூப்பர் அப்போது பிரிட்டிஷ் இராணுவத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த குதிரைப்படையில் (7th Madras Cavalry) பணிக்கு சேர்ந்தவர். புகைப்படக்கலை இவரது பொழுதுபோக்கு என்பதால் இராணுவப் பணியை செய்து கொண்டே புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தார். 1872-ல் ’’இந்தியாவின் மக்கள்’’ (The People of India) என்ற மிகப் பிரபலமான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டார். இந்த சூழலில்தான் அப்போது ஏற்பட்ட பஞ்சத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் தனது கேமராவினால் பதிவு செய்தார்.  பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் துயரத்தைக் உலகத்திற்கு காட்டியதில் வில்லோபை வாலஸ் ஹூப்பரின் புகைப்படங்களே முக்கியக் காரணமாக  இருந்தன. அதேசமயம் பஞ்சத்தைக் காட்டுவதற்காக பட்டினியால் வாடிக் கொண்டிருந்த பலரை அவரது ஸ்டுடியோவிற்கே அழைத்து சென்று புகைப்படம் எடுத்துவிட்டு, அவர்களுக்கு உணவைக்கூட அளிக்காமல் திருப்பி அனுப்பும்போது பலர் இறந்துபோயினர். இந்தக் கொடும் செயலால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் ஹூப்பர்.

                                                                                                                                                   புகைப்படம் பேசும்

-ஜெ.முருகன்

முந்தைய தொடர்களைப் படிக்க...