Published:Updated:

எம்.எல்.ஏ.க்களை வைத்து ஜெயலலிதா என்னை அடிக்க முயற்சித்தார்: விஜயதரணி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வைத்து முதல்வர் ஜெயலலிதா என்னை அடிக்க முயற்சி செய்தார் என்று தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதரணி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டசபையில் இருந்து வெளியே வந்த விஜயதரணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காவல்துறை மானியத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய பிறகு, எனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி கேட்டேன். ஆனால், சபாநாயகர் எனக்கு வாய்ப்பு தரவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சட்டப்பேரவை நுழை வாயிலில், எதிர்க்கட்சிகள் மறியலில் ஈடுபட்டபோது, என் மீது தாக்குதல் நடந்தது. ஆனால், அந்த மறியல் போராட்டத்தில் எதுவும் நடக்காதது போல் முதலமைச்சர் அறிக்கையை படித்தார். இதற்காக நான் எழுந்து கேட்ட போது, எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டவில்லை.

மேலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை கேலியும், கிண்டலுமாக பேசியதோடு அடிக்க வருவது போல செயல்பட்டனர். அசிங்கம், அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டினர். இதை நான் மகா இழுக்காகவே கருதுகிறேன். முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்களை வைத்து என்னை அடிக்க முயற்சி செய்தார். பெண் எம்.எல்.ஏ.க்கள் என் புடவையை பிடித்து இழுத்தார்கள். இது போன்ற மோசமான சம்பவங்கள் சட்டசபையில் நடை பெற்றது. எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக சட்டசபையில் கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லை" என்றார் ஆவேசமாக.