Published:Updated:

அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம்: அன்புமணி அதிரடி பேச்சு

விகடன் விமர்சனக்குழு
அரசு ஊழியர்களுக்கு  15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம்: அன்புமணி அதிரடி பேச்சு
அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம்: அன்புமணி அதிரடி பேச்சு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு 15 நாளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி அதிரடியாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

அரசு ஊழியர்களுக்கு  15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம்: அன்புமணி அதிரடி பேச்சு

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி பேசுகையில், "மக்கள் பா.ம.க.வை வித்தியாசமான கட்சி என்று எதிர்பார்க்கிறார்கள். நாம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கல்வி, மின்சாரம் போன்றவற்றை இலவசமாக வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயை இலவசமாக்குவோம்.

பா.ம.க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. மாறாக அந்த கட்டணங்களை குறைப்போம். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு 15 நாளுக்கும் ஊதியம் வழங்கப்படும். ஒரு சொட்டு மது, ஒரு பைசா ஊழல் இல்லாத அரசு அமைப்போம்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். குடிசை இல்லாத தமிழகத்தை ஏற்படுத்துவோம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவோம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.