Published:Updated:

என்னுடைய முகநூல் பக்கத்தை ஜெயலலிதா பார்ப்பது மகிழ்ச்சி என்கிறார் மு.க.ஸ்டாலின்!

விகடன் விமர்சனக்குழு
என்னுடைய முகநூல் பக்கத்தை ஜெயலலிதா பார்ப்பது மகிழ்ச்சி என்கிறார் மு.க.ஸ்டாலின்!
என்னுடைய முகநூல் பக்கத்தை ஜெயலலிதா பார்ப்பது மகிழ்ச்சி என்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: என்னுடைய முகநூல் பக்கத்தை ஜெயலலிதா தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

என்னுடைய முகநூல் பக்கத்தை ஜெயலலிதா பார்ப்பது மகிழ்ச்சி என்கிறார் மு.க.ஸ்டாலின்!

இந்த ஆண்டுக்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், "சட்டமன்ற தி.மு.க. குழு தலைவர் மு.க.ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலேயே அவரது கருத்துகள்தானா? என்பதை அவர் விளக்க வேண்டும்"என்று சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், ''தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளி விவரங்களை முதலமைச்சர் ஜெயலலிதா மறுத்திருக்கிறார். அந்த புள்ளி விவரங்கள், தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை. அதனால், அந்த புள்ளி விவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக்காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஆனாலும், என்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அவரது கணினி மூலம் அவர் மாநிலம் முழுவதும் மெய் நிகர் சுற்று பயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

மாநிலம் முழுவதும் செல்லும் 'நமக்குநாமே' பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன். ஆகவே என் முகநூல் செய்திகளை முதலமைச்சர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கனவுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

முதலமைச்சரால் மக்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகளை அறிந்துகொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்னைகள் பற்றி தெரிந்துகொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று பதில் அளித்து உள்ளார்.