Published:Updated:

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன்? கேள்வி எழுப்பும் கெஜ்ரிவால்!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன்? கேள்வி எழுப்பும் கெஜ்ரிவால்!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன்? கேள்வி எழுப்பும் கெஜ்ரிவால்!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன்? கேள்வி எழுப்பும் கெஜ்ரிவால்!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாக அரசு முறைப் பயணமாக அயர்லாந்து, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க், கூகுள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயலர் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்ட பலரைச் சந்தித்து, இந்திய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் முடிந்துள்ளது. இதுவரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் இந்த நாட்டுக்குக் கிடைத்த பலன்கள் என்ன என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்யக் கோரி தனிநபர் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று வலியுறுத்துவது இந்தியப் பிரதமரின் அந்தஸ்துக்கு சரியாக இருக்குமா? சீனர்கள் முதலில் சீனாவை கட்டமைத்தனர். இதைத் தொடர்ந்துதான் அனைத்துப் பெருநிறுவனங்களும் சீனாவில் முதலீடு செய்யப் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. அதனால், முதலில் இந்தியாவை உருவாக்குவோம். நாம் இந்தியாவை பலம் வாய்ந்ததாக உருவாக்கினால் முதலீடுகள் நமது விருப்பம்போல வந்து சேரும்" என்று கூறி உள்ளார்.