Published:Updated:

காங்கிரஸ் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடியாம்: எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்க உத்தரவு !

காங்கிரஸ் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடியாம்: எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்க  உத்தரவு !
காங்கிரஸ் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடியாம்: எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்க உத்தரவு !

காங்கிரஸ் கட்சியில் கடும் நிதித்தட்டுப்பாடு நிலவுவதால், அந்த கட்சியின் எம்.பிக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கட்சிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டுமென அந்த கட்சியின்  தலைமை உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடியாம்: எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்க  உத்தரவு !

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா,  காங்கிரஸ் கட்சியின் 44 மக்களவை  எம்.பி.க்களுக்கும் 68 மேல்சபை  எம்.பிக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்குள் எம்.பிக்கள் தலா ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

அதோடு முன்னாள் எம்.பி.க்களும் கட்சிக்கு நன்கொடை அளிக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சி எம்.பிக்களிடம் நன்கொடை வசூலிக்கும் பொறுப்பு  டெல்லி மாநில பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, டெல்லி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மக்கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளிக்க மறுத்துள்ளதால் கட்சிக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாகவும், மாநிலங்களுக்கு ஏராளமான நிதி பிரித்தளிக்கப்பட்டதாலும் அந்த கட்சி  நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், கட்சி வளர்ச்சி நிதிக்காக கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 250 தர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இதில் 75 சதவீதம் மத்திய தலைமைக்கும், 25 சதவீதம் மாநிலத்துக்கும் பிரித்தளிக்கப்படும் என்று அந்த கட்சியின்  பொருளாளர் மோதிலால் வோரா தெரிவித்திருந்தார்.